'அநாத்' அல்லது அநாதை என்ற வார்த்தையில் சமூக இழிவு எதுவும் இல்லை, அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை என மும்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஒரு பொது நல வழக்கை தள்ளுபடி செய்யும் போது தெரிவித்துள்ளது.






அநாதை என்ற வார்த்தையை 'ஸ்வநாத்' ஆக மாற்றக் கோரி, ஸ்வநாத் அறக்கட்டளை என்ற லாப நோக்கற்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி மாதவ் ஜம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.


பெற்றோரை இழந்த குழந்தைகள் ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர் என்றும், ஆநாதை என்ற வார்த்தை வறிய, ஆதரவற்ற மற்றும் உரிமைகள் பறிபோன குழந்தையை பிரதிபலிக்கிறது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 'ஸ்வநாத்' என்ற வார்த்தை தன்னம்பிக்கை கொண்ட குழந்தை என்று பொருள்படும்.


எவ்வாறாயினும், இது நீதிமன்றம் தலையிட வேண்டிய வழக்கு அல்ல எனக் கூறிய தலைமை நீதிபதி தத்தா, சில நேரங்களில் நாமும் லட்சுமண ரேகாவை வரைய வேண்டும், எல்லா விஷயங்களிலும் தலையிட மாட்டோம் என தெரிவித்துள்ளார்.


மனுவை செய்த நீதிமன்றம், "அநாத் என்ற சொல் காலங்காலமாகப் பயன்பாட்டில் உள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அநாத் என்ற வார்த்தை சமூகக் இழிவை ஏற்படுத்துவதாக மனுதாரர் கூறுவதை நாங்கள் ஏற்கவில்லை. மாற்றம் தேவையே இல்லை. மனுதாரர் இந்த வார்த்தையை ஸ்வநாத்" என மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இது லாப நோக்கமற்ற அமைப்பின் பெயராகும்.






ஆநாதை என்ற சொல்லில் உள்ள சமூக இழிவு என்ன? ஆங்கில வார்த்தையான orphan என்பதற்கு இந்தி, மராத்தி மற்றும் வங்கம் போன்ற பல மொழிகளில் அநாதை என்றே அழைக்கப்படுகிறது. வார்த்தையை மாற்ற சொல்ல மனுதாரர் யார்? அவருக்கு மொழியியல் பற்றி என்ன தெரியும்?" என தெரிவித்தது.


மனுதாரரின் வழக்கறிஞர் உதய் வருஞ்சிகர், இத்தகைய குழந்தைகளைக் குறிப்பிடும்போது ஒரு சிறந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால், அதை நீதிமன்றம் மறுத்துவிட்டது.