புகழ்பெற்ற கன்னட நடிகர் பவர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் உடல் பெங்களூருவில் முழு அரசு மரியாதையுடன் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீகண்டீரவா ஸ்டுடீயோவில் உள்ள பெற்றோர் நினைவிடம் அருகிலேயே அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஏராளமான பொதுமக்கள், ரசிகர்களும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்கள்.


 














கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் 46 வயதான புனித் ராஜ்குமார் கடந்த 29ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மணி நேரங்களில் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த கன்னட திரையுலகுக்கு மட்டுமல்லாமல் இந்தியா திரையுலகுக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.






இதனைத்தொடர்ந்து, பொதுமக்களின் அஞ்சலிக்காக புனித் ராஜ்குமாரின் உடல் ஸ்ரீகண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டது. அவரின் உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண