இந்தியாவில் வசிக்கும் சித்தி இன மக்களுக்காக போராடி, நலத்திட்ட உதவிகளை கொண்டு சென்று, கர்நாடக சட்டமன்றத்திற்க்கு தேர்வான முதல் சித்தி இனத்தை சேர்ந்தவர் என்ற பெருமை கொண்ட பாஜக எம்எல்சி சாந்தாராம் சித்தி வாழ்வில் உயர்ந்தபோதும் மிகவும் எளிமையான வாழ்வையே வாழ்ந்து வருகிறார். அவர் சமீபத்தில் ரானேபெண்ணூர்  பேருந்து நிலையத்தில் பெருந்திற்காக காத்திருந்த புகைப்படம் வைரலாகி உள்ளது. அந்த ட்விட்டர் பதிவின் கீழ் கமெண்ட் பகுதியில் அவரது எளிமையை குறித்து நெகிழ்ந்து வருகின்றனர். சித்தி இன மக்களுக்காக போராடி வரும் சமூக செயற்பாட்டாளரான சாந்தாராம் சித்திக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.



'நீக்ரோ' என்பது பாரசீக வார்த்தை. இதன் பொருள் அபீசினியா வாசிகள். ஆப்பிரிக்க நாடான எதியோப்பியாவின் முந்தைய பெயர் அபீசினியா ஆகும். இன்றும் இந்தியாவில் பெருமளவிலான ஆஃப்ரிக்க பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர். இன்று இவர்கள் நீக்ரோக்கள் என்று அழைக்கப்படுவதில்லை, 'சித்தி' என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் வசிக்கும் ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இவர்களின் எண்ணிக்கை தற்போது ஏறக்குறைய 20 ஆயிரமாக இருக்கலாம். கர்நாடகா, மகாரஷ்டிரா, குஜராத்தின் சிறிய கிராமங்களிலும், ஹைதிராபாதிலும் வசிக்கும் இவர்கள், ஆப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியின் 'பந்தூ' வம்சத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் எத்தியோப்பியாவில் இருந்து ஏழாம் நூற்றாண்டுவாக்கில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் அடிமைகளாக அழைத்துவரப்பட்டனர். அடிமைகளாகவும், வணிகர்களாகவும், மாலுமிகளாகவும், கூலிப்படையினராகவும் அழைத்துவரப்பட்ட இந்த மக்கள் காலப்போக்கில் இங்கேயே தங்கிவிட்டார்கள். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலும் 'சித்தி' மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.






அந்த மக்களில் இருந்து ஒருவர் அவர்களுக்காக போராடி பல உரிமைகளை பெற்றுத்தந்துள்ளார். அவர்தான் சாந்தாராம் புத்னா சித்தி. அவர் சில வருடங்கள் முன்பு பெலகாவி ராணி செனம்மா பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்ட்ரேட் பட்டம் பெற்றுள்ளார். சமூக சேவகராக பணியாற்றி வரும் சாந்தராமன், 1989ல் வனவாசி கல்யாணாஷ்ரமத்தில் காரியகர்த்தாவாக சேர்ந்து, விடுதி காப்பாளராக பணியாற்றினார். இன்று, அவர் ஆர்எஸ்எஸ் பழங்குடியினர் நல முயற்சியான அமைப்பின் செயலாளராகவும், பிரந்த ஹித்ரக்ஷா பிரமுகராகவும் உள்ளார். சட்ட மேலவைக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பரிந்துரை செய்த ஐந்து உறுப்பினர்களில் சாந்தராமனின் பெயரும் இருந்தது. அதன்படி கர்நாடக சட்டப்பேரவைக்கு வந்த முதல் சித்தி இனத்தை சேர்ந்தவர் சாந்தாராம் தான். அவர் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள சிர்சி நகரத்திற்கும் யெல்லாபூருக்கும் இடையில் அமைந்துள்ள ஹிடலஹள்ளி கிராமத்தில் .