பஞ்சாப் மாநிலத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் பைக் மெக்கானிக்கின் மகள் மாநிலத்திலே அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். லூதியானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஷிம்லபுரியில் அமைந்துள்ள தேஜாசிங் சுதாந்தர் மெமோரியல்  சீனியர் செகண்டரி பள்ளியில் படித்தவர் அர்ஷ்தீப் கவுர். இவரது தந்தை இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்கும் மெக்கானிக்காக உள்ளார். இவரது மகளான அர்ஷ்தீப் கவுர் சிறுவயது முதலே நன்றாக படிக்கக்கூடியவர்.


12ம் வகுப்பு தேர்வில் தீவிரமாக படித்து வந்த அர்ஷ்தீப் கவுர் சிறப்பாக தேர்வெழுதியிருந்தார். இதன்பயனாக, அவர் 99.4 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலே முதல் இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தைப் பிடித்த அர்ஷ்தீப்கவுருக்கு ஆசிரியர்களும், கல்வியாளர்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.




முதலிடத்தைப் பிடித்த அர்ஷ்தீப்கவுர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆவதே தன்னுடைய லட்சியம் என்று கூறியுள்ளார். மேலும், தற்போது முதலே சிவில்சர்வீஸ் தேர்வுக்கு தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். அர்ஷ்தீப் கவுர் 12ம் வகுப்பு தேர்விற்காக இரவில் நீண்ட நேரமாக கண்விழித்து படித்துள்ளார். அப்போது எல்லாம் அவருடன் அவரது பெற்றோர்களும், அவரது உறவினர்களும் உறங்காமல் இருந்துள்ளனர்.


மாநிலத்திலே லூதியானா மாவட்டம் 12ம் வகுப்பு தேர்ச்சியில் சிறப்பாக தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. லூதியானா மாவட்டத்தில் 35 ஆயிரத்து 346 மாணவர்கள்  தேர்ச்சி எழுதியதில், 96.84 சதவீதம் மாணவர்கள் அதாவது 34 ஆயிரத்து 229 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஆர்.எஸ்.மாடல் பள்ளியைச் சேர்ந்த முஸ்கன் என்ற மாணவர் வணிகவியல் பாடத்தில் 99.2 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். முஸ்கனின் தந்தை ஒரு டெய்லர் ஆவார். மனிதத்துவம் பாடப்பிரிவில் திஷாமேதா என்ற மாணவி 99.2 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணக்குப்பதிவியல் பாடத்தில் கிட்டெர்விண்டி பகுதியைச் சேர்ந்த ஜஸ்வீந்தர்கவுர் 98.2 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து அசத்தினார்.




முதலிடம் பிடித்த மாணவி அர்ஷ்தீப்கவுருக்கும், தேர்ச்சியடைந்த மற்ற மாணவர்களுக்கும் அரசு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு முயற்சியை கைவிட வேண்டாம் என்றும் கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 


மேலும் படிக்க : Isha Ambani: ரிலையன்ஸ் ரீடெய்ல் குழுமத்தின் தலைவராகிறார் முகேஷ் அம்பானி மகள் இஷா.. விரைவில் வருகிறது அறிவிப்பு..


மேலும் படிக்க : தனித்தனி பரிசு.. ஒவ்வொன்னும் தனி ரகம்.. உலக நாடுகளின் தலைவர்களை அசர வைத்த பிரதமர் மோடி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண