முகேஷ் அம்பானியின் மகள் இஷா அன்பானி (Isha Ambani ) ரிலையன்ஸ் ரீடெயில் குழுமத்தின் (Reliance conglomerate’s retail ) தலைவராக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ் குழுமத்தின் கீழ் பல நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி ஜியோ இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகினார். ஜியோ நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஆகாஷ் அம்பானியிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர் நிறுவனத்தின் தலைவராக இஷா அம்பானி விரைவில் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ரிலையன்ஸ்-இன் நெருங்கிய வட்டாரங்கள்,அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவரை நாங்கள் எதுவும் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டனர். இதுகுறித்த அறிவிப்பு புதன்கிழமை வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இஷா அம்பானியும், ஆகாஷ் அம்பானியும் இரட்டையர்கள். முகேஷ் அம்பானி தனது மகன்கள், மகளுக்கு நிறுவன பொறுப்புகளை பகிந்து அளித்து வருகிரார். ஆனந்த் அம்பானிக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இஷா அம்பானி அமெரிக்காவில் உள்ள் யேல் பல்கலைக்கழகத்தில் (Yale University) தனது படிப்பை முடித்தவர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்