தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்ப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் காவல் துறை ADG ஜித்தேர்ந்திர கங்கார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, குறிப்பாக பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவாகாரம் தொடர்பாக பீகார் மாநில காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜித்தேர்ந்திர கங்கார் கூறுகையில், “ இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பத்து பேர் கொண்ட குழு இதற்கென அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. என்றார்.
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.