Bihar stampede: பீகாரில் கோயில் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயமடைந்துள்ளனர்.


கூட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் பலி:


பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தின் மக்தும்பூரில் உள்ள பாபா சித்தநாத் கோயிலில் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர். காயங்களுடன் மீட்கப்பட்ட 35 பேர் மக்தும்பூர் மற்றும் ஜெகநாபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புனித ஸாவான் மாதத்தின் நான்காவது திங்கட்கிழமையை ஒட்டி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தான் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


காவல்துறை விளக்கம்:


கூட்ட நெரிசல் குறித்த தகவல் வெளியானதும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தற்போது அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக, ஜெகனாபாத் மாவட்ட ஆட்சியர் அலங்கிரிதா பாண்டே  தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை அடையாளும் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், அது முடிந்ததும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.


அண்மையில் உத்தரபிரதேசத்தில் சாமியார் ஒருவரின் சொற்பொழிவ கேட்க ஏராளமான மக்கள் குவிந்ததால், ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.