Watch Video : பீகாரில் 65 வயதான முதியவரை பெண் காவலர்கள் 2 பேர் சேர்ந்து லத்தியால் அவரை அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
65 வயதான ஆசிரியர்:
பீகார் மாநிலம் கைமூர் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் 65 வயதான ஆசிரியர் நாவல் கிஷோர் பாண்டே. பீகார் மாநிலம் கைமூர் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் 65 வயதான ஆசிரியர் நாவல் கிஷோர் பாண்டே. தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த இவர், நிலைத் தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. ஆசிரியர் நாவல் கிஷோர் சாலையில் விழுந்ததால் அவ்வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கைமூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அங்கு பணியில் இருந்த பெண் காவலர்கள் 2 பேர் ஆத்திரமடைந்தனர். பின்பு, அவர்கள் வைத்திருந்த லத்தியால் நாவல் கிஷோரை வயதானவர் என்றுக் கூட நினைக்காமல் நடுரோட்டில் அடித்துள்ளனர். இதனால் அவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அவர் அலறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற கடுமையாக நடந்துக் கொண்ட பெண் காவலர்கள் இரண்டு பேர் மீது பீகார் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து இந்த சம்பவம் உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்க சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கைமூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலீத் மோகன் ஷர்மா தெரிவித்துள்ளார்.