Crime : மனைவி வீட்டிற்கு வராததால் தனது அந்தரங்க உறுப்பை 25 வயதான இளைஞர் வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் மாதேபுரா அருகே ரஜினிநாயகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரா பாசுகி. இவரது மகன் கிருஷ்ணா பாசுகி (25). இதை மாநிலத்தில் கோல்பாரா பகுதியைச் சேர்ந்த சேட்டேலால் என்பவரின் மகள் அனிதா. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மொத்தம் 4 குழந்தைகள். மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கிருஷ்ணா பாசுகி பஞ்சாப் மாநிலத்தில் மண்டியில் என்ற பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். தனது கணவர் வெளியூரில் வேலை செய்து வருவதால், அவரது மனைவி அனிதா தனது தாய் வீட்டிற்கு சென்று கெண்டிருந்தார். அவரது கணவர் ஊருக்கு வரும்போது மட்டும் தனது வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தார் அனிதா.
ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட கணவர்:
இந்நிலையில், கிருஷ்ணா பாசுகி சில நாட்களுக்கு முன் வேலையை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வந்ததார். அப்போது அவரது மனைவி வீட்டில் இல்லை. அவர் தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார். இதனை அடுத்து கிருஷ்ணா அவருக்கு போன் செய்து வீட்டிற்கு வரும்படி அனிதாவிடம் கூறினார். இதற்கு அனிதா மறுப்பு தெரிவித்துள்ளார். சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக அனிதா தெரிவித்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த கிருஷ்ணா கூர்மையான ஆயுதத்தை எடுத்து தனது அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மனநலம் பாதிப்பா?
இதற்கிடையில் கிருஷ்ணா பாசுகி மனநலம் பாதிக்கப்பட்டவர் என சுற்று வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இன்னும் உறுதியாக சொல்லப்படவில்லை. அவர் இதுபோன்று செய்ததற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவரது மனைவி அனிதா மற்றும் அவரது உறவினர்களுடன் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Crime: நடனமாட மறுத்த 10 வயது சிறுமி.. பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த இளைஞர்கள் - பீகாரில் கொடூரம்