பீகாரில் இன்று அந்த மாநில சட்டசபையில் அந்த மாநில சபாநாயகரான, ராஷ்ட்ரியா ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக தற்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும், இது நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாகவும் இருந்தது. 

Continues below advertisement

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் வெற்றி:

இந்த நிலையில், இன்று அந்த மாநில ஆளுங்கட்சி சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், நிதிஷ்குமார் அரசு ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகருக்கு எதிராக 125 வாக்குகளும், அவருக்கு ஆதரவாக 112 வாக்குகளும் பதிவாகியது. முந்தைய ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் சபாநாயகராக பதவிவகித்து வந்த அவத் பிஹாரி, பா.ஜ.க. - ஜனதா தளம் கூட்டணி அமைத்த பிறகு தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய தயக்கம் காட்டினார். 

இதையடுத்து, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் இன்று ஆளுங்கட்சியினரால் வெற்றி பெற வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில்  நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் தொடங்க இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், பா.ஜ.க.வை மிக கடுமையாக எதிர்த்து வந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திடீரென பிரதமர் மோடிக்கு ஆதரவாக மாறினர். அந்த மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தவர், அந்த கூட்டணியில் இருந்து கடந்த ஜனவரி 28ம் தேதி பிரிந்து, அதே தேதியில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து பீகாரின் 9வது முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்.

Continues below advertisement

தேஜஸ்வி யாதவ் கண்டனம்:

இதனால், நிதிஷ்குமாரை ராஷ்ட்ரிய ஜனதா தளம் மிக கடுமையாக விமர்சித்தது. இன்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த அவத் பிஹாரி சபாநாயகர் பதவியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தனது புதிய கூட்டணியுடன் அவரை நீக்கியுள்ளனர். இதற்கு தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார் ஏன் ராஜினாமா செய்தார்? என்பதை மக்களுக்கு கூற வேண்டும் என்றும் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: கோவை குண்டுவெடிப்புக்கும் கொழும்பு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு என்ன? தொடரும் ரெய்டு.. என்ஐஏ பகீர்!

மேலும் படிக்க: காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை - கத்தார் நீதிமன்றம்