பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தது பத்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.


ஷாகஞ்ச் பகுதியில் அதிகாலை 2:30 மணியளவில் சத் பூஜைக்காக சமைத்துக் கொண்டிருந்த போது இந்த சோகம் அரங்கேறியுள்ளது. தீயை அணைக்க முயன்ற 7 போலீசாருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. ஷாகஞ்ச் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சத் பூஜைக்காக அனில் கோஸ்வாமி என்பவரின் குடும்பத்தினர் பிரசாதம் சமைத்து கொண்டிருந்தபோது சில எரிவாயு சிலிண்டர்கள் தீப்பிடித்து எரிந்தன. 


 






இது எரிவாயு கசிவுக்கு வழிவகுத்தது. இதனால் பெரிய தீயை ஏற்பட்டது. அதை அணைக்க உள்ளூர்வாசிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இதை மீறியும் தீ விபத்து தீவிரமடைந்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 


இருப்பினும், தீ தீவிரமடைந்தது. சிலிண்டர் வெடித்தது. தீயை அணைக்க போலீசார் சிலிண்டரின் மீது தண்ணீரை ஊற்றியபோது 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக அவுரங்காபாத் சதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


மேலும் பலர் தனியார் முதியோர் இல்லங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வினய் குமார் சிங் இதுகுறித்து கூறுகையில், "சம்பவத்திற்கான காரணம் இன்னும் நிர்வாகத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், வீட்டின் உரிமையாளர் அனில் கோஸ்வாமி எரிவாயு வெடித்ததால் தீப்பிடித்ததாக கூறுகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.


சமீபத்தில், உத்தரப் பிரதேசம் நொய்டாவில் செக்டார் 3 பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.


இதுகுறித்து காவல்துறை இணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ரவிசங்கர் சாபி பேசுகையில், "பிளாஸ்டிக் தட்டு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. பல தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. நிறுவனம் அருகே இருந்த கட்டிடம் காலி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை" என்றார்.