பெங்களூர் நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இன்னும் முடியவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் என தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களும் கனமழை: Bengaluru heavy Rain:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழை பெய்து வரும் நிலையில், இந்த நிலை முடியவில்லை என்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (வியாழன்) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடலோர மற்றும் தெற்கு உட்புற கர்நாடகாவின் ஒரு சில இடங்களிலும், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் கர்நாடகாவின் உட்புறத்திலும் கனமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
34 ஆண்டுகளில் கண்டிராத கனமழை
உள் கர்நாடகா மற்றும் அதனை சுற்றியுள்ளபகுதிகளில் சூறாவளி சுழற்சி நிலவி வருவதால் கன மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,பெங்களூருவில் கடந்த நான்கு நாட்களில் 251.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 131.6 மி.மீ மழை பெய்தது, இது கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் மாதத்தில் 24 மணி நேர மழைப்பொழிவாகும். மேலும், செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை பெய்துள்ள மழை அளவானது சராசரியை விட 148 சதவீதம் அதிகமாகும், அதே நேரத்தில் பெங்களூரு நகரம் 168 சதவீத உபரி மழையைப் பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக புதன்கிழமை காலை, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, சிக்கமகளூரு, குடகு மற்றும் சிவமொக்கா மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை காலை 8:30 மணி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் "ஆரஞ்சு" எச்சரிக்கை விடுத்திருந்தது. பாகல்கோட், பெலகாவி, தார்வாட், கதக், ஹவேரி, விஜயபுரா, யாத்கிர், பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகர்ப்புறம், சாம்ராஜ்நகர், தாவணகெரே, ஹாசன், மண்டியா மற்றும் மைசூரு ஆகிய மாவட்டங்களுக்கு இதே காலகட்டத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பலத்த மழை காரணமாக கடுமையான நீர் தேக்கம் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் இடையூறுகளும் ஏற்பட்டுள்ளன.
அல்ர்ட் நிறங்களின் விவரம்:
பச்சை (எந்த நடவடிக்கையும் தேவையில்லை),
மஞ்சள் ( அப்டேட்டுடன் இருங்கள்),
ஆரஞ்சு (தயாராக இருக்க வேண்டும்),
சிவப்பு (நடவடிக்கை எடுக்கவும்) ஆகிய நான்கு வண்ண குறியீடுகள் மழை எச்சரிக்கைகளுக்காக வானிலை மையத்தால் பயன்படுத்தப்படுகின்றன.