பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பெங்களூரு நகரில் 08  மணி நேரத்திற்கு மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.

Continues below advertisement

எவ்வளவு நேரம் மின்வெட்டு?

பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளும் இடங்களிள் மின் தடையானது காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரை மின் தடை இருக்கும் என்றும் பணிகள்  திட்டமிட்ட  நேரத்திற்கு முன்பே முடிவடைந்தால் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.

எந்த பகுதியில் மின் தடை?

நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காலாண்டு பராமரிப்பு பணிகளுக்காக பெஸ்காமின் 66/11 கே.வி. பைதரஹள்ளி மற்றும் 66/11 கே.வி. ஸ்ரீகந்தகல் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

Continues below advertisement

பைதரஹள்ளி பகுதிகளான மகாதேஷ்வரநகர், பிரசன்னா லேஅவுட், ஹொசல்லி, கெம்பேகவுடநகர், கொல்லரஹள்ளி, நெட்கெரப்பா தொழிற்பேட்டை, ஹெரோஹள்ளி, துங்காநகர், விக்னேஷ்வரநகர், அன்னபூர்ணேஸ்வரி நகர், அஞ்சனகிரி, சுங்கடகத்தே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் நாளை மின் தடை ஏற்படும்

10 மணி முதல் 6 மணி வரை

இதுமட்டுமில்லாமல் ஸ்ரீகந்தகாவல் என்ஜிஇஎஃப் லேஅவுட், பாலாஜி லேஅவுட், எம்.பி.எம் லேஅவுட், சர் எம்.வி. 9வது பிளாக், மல்லத்தஹள்ளி, கெங்குண்டே, உல்லால் மெயின் ரோடு, லட்சுமி மருத்துவமனை சன்னிகப்பா தொழில்துறை பகுதி, கவிதா மருத்துவமனை, வொக்கலிகரா சங்க விடுதி, அன்னபூர் சங்க விடுதி, கவிதா மருத்துவமனை, அன்னபூர் பள்ளி, அன்னபூர் பள்ளி சுமனஹள்ளி, சுங்கடகட்டே மெயின் ரோடு, ஹோய்சலாநகர், மோகன் தியேட்டர், சிவா பண்ணை, மாருதிநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

 பெஸ்காம் மின்சாரம் வழங்கும் இடங்கள்

கர்நாடகாவின் எட்டு மாவட்டங்களான பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு கிராமப்புறம், சிக்கபல்லபுரா, கோலார், தாவணகெரே, தும்கூர், சித்ரதுர்கா மற்றும் ராமநகரா ஆகிய மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கும் பொறுப்பு பெஸ்காமுக்கு உள்ளது. இந்த நிறுவனம் 41,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவையும் கோடிக்கும் மேற்பட்ட மக்களையும் கொண்டுள்ளது. இது நான்கு மண்டலங்கள், ஒன்பது வட்டங்கள், 32 பிரிவுகள், 147 துணைப்பிரிவுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள் வழியாக செயல்படுகிறது.