ரயில்களில் கூட்ட நெரிசல்

ரயிலில் பயணம் செய்யவே மக்கள் அதிகளவில் விருப்பப்படுவார்கள். குறிப்பாக பாதுகாப்பு வசதியோடு, அடிப்படை வசதிகளும் இருப்பது முக்கிய காரணமாகும். எனவே நாடு முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டாலும் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் கூட்ட நெரிசலை குறைக்க அவ்வப்போது சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் படி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை பீச் வழியாக பனாரஸ்க்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. 

Continues below advertisement

ராமேஸ்வரம் டூ சென்னை பீச் சிறப்பு ரயில்

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகளின் அதிக நெரிசலை குறைக்கும் வகையில்,  ராமேஸ்வரம் – பனாரஸ் – சென்னை பீச் இடையே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, (ரயில் எண் 06099) ராமேஸ்வரம் – பனாரஸ் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி இரவு 23.50 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு, 4 நாள் பயணமாக  ஜனவரி 2-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு பனாரஸை சென்றடையவுள்ளது. 

ராமேஸ்வரம்- பனாரஸ் சிறப்பு ரயில்

அதேபோல், (ரயில் எண் 06100) பனாரஸ் – சென்னை பீச் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் 2026 ஜனவரி 2ஆம் தேதி இரவு 23.00 மணிக்கு பனாரஸில் இருந்து புறப்பட்டு, 3 நாள் பயணமாக  ஜனவரி 5ஆம் தேதி இரவு 22.00 மணிக்கு சென்னை பீச் ரயில் நிலையத்தை அடையும். இச்சிறப்பு ரயிலில் மொத்தம் 16 ஏசி மூன்றாம் வகுப்பு படுக்கை பெட்டியும்,  2 லக்கேஜ் பெட்டிகளும் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 பெட்டிகள் ஐஆர்சிடிசி மற்றும் காசி தமிழ் சங்கமம் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

 சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது

மேலும் இந்த சிறப்பு ரயில்  திருச்சி, புடுக்கோட்டை, விஜயவாடா, நாக்பூர், ஜபல்பூர், பிரயாக்ராஜ் செஹோகி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நிற்கும். இச்சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு டிசம்பர் 27 ஆம் தேதி மதியம் 12.00 மணி முதல் துவங்கப்பட்டுள்ளது என்று தென் ரயில்வே தெரிவித்துள்ளது.