பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக டிசம்பர் 4 முதல் 8 ஆம் தேதி வரை பெங்களூருவில் மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது
பெங்களூரு மின் தடை:
பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக டிசம்பர் 4 முதல் 8 ஆம் தேதி வரை நகரின் முக்கிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 8 மணி நேரம் வரை மின் தடை ஏற்படும்.
இந்த மின் தடை நேரத்தில் மக்கள் ஒத்துழைக்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின் தடை ஏற்படும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவுள்ளனர்
எவ்வளவு நேரம் மின்வெட்டு?
பணிகள் திட்டமிட்டபடி முடிவடைந்தால் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின் தடை ஏற்படும். அப்பகுதியில் உள்ள சூழ்நிலைகளைப் பொறுத்து 1 முதல் 5 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படலாம்.
எந்த பகுதியில் மின் தடை?
தெற்கு பெங்களூரு
ஜேபி நகர், ஜெயநகர், பனசங்கரி, குமாரசாமி லேஅவுட், உத்தரஹள்ளி, பத்மநாபநகர், அரேஹள்ளி
மேற்கு பெங்களூரு
ராஜாஜிநகர், விஜயநகர், பசவேஸ்வராநகர், நாகர்பாவி, சந்திரா லேஅவுட், மாகடி சாலையின் சில பகுதிகள்
வடக்கு பெங்களூரு
ஹெப்பல், சஞ்சய்நகர், யெலஹங்கா, வித்யாரண்யபுரா, ஆர்டி நகர், சககர் நகர்
கிழக்கு பெங்களூரு:
ஒயிட்ஃபீல்ட், ஹூடி. கேஆர் புரம். ஐடிபிஎல், மகாதேவபுரா, வர்தூர்
மத்திய பெங்களூரு:
சிவாஜிநகர், சாந்திநகர், ரிச்மண்ட் டவுன், லாங்ஃபோர்டு சாலை, எம்ஜி சாலையின் சில பகுதிகள்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் மட்டுமல்லாமல் வைட்ஃபீல்ட், ஹூடி, ஐடிபிஎல் மற்றும் மகாதேவபுரா, சிவாஜிநகர், ரிச்மண்ட் டவுன் மற்றும் எம்ஜி சாலை ஆகிய இடங்களிலும் மின்சார தடையானது மேற்க்கொள்ளப்படவுள்ளது.
பெஸ்காம் மின்சாரம் வழங்கும் இடங்கள்
கர்நாடகாவின் எட்டு மாவட்டங்களான பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு கிராமப்புறம், சிக்கபல்லபுரா, கோலார், தாவணகெரே, தும்கூர், சித்ரதுர்கா மற்றும் ராமநகரா ஆகிய மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கும் பொறுப்பு பெஸ்காமுக்கு உள்ளது. இந்த நிறுவனம் 41,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவையும் கோடிக்கும் மேற்பட்ட மக்களையும் கொண்டுள்ளது. இது நான்கு மண்டலங்கள், ஒன்பது வட்டங்கள், 32 பிரிவுகள், 147 துணைப்பிரிவுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள் வழியாக செயல்படுகிறது.