தேர்தல் பணிகள் தொடக்கம்..
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம். ஒரு தொகுதிக்கு குறைந்தது 2 முதல் 4 உதவி - தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் வழக்கு விசாரணை
திருப்பரங்குன்றம் தீப வழக்கு விசாரணை தொடங்கியது. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணையை தொடங்கியது. மலை உச்சியில் விளக்கேற்ற உத்தரவிட்ட தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏவிஎம் சரவணன் காலமானார்
புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும், AVM நிறுவன இயக்குநருமான சரவணன் (86) உடல்நலக்குறைவால் காலமானார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சரவணனது உடலுக்கு நேரில் அஞ்சலி.
'Financial Pollution-ஆல் பாதிக்கப்படும் தமிழ்நாடு'
“தமிழ்நாட்டுக்கான நிதியை நிறுத்தி வைத்து, நிதி மாசுபாட்டை'உருவாக்கியுள்ளது மத்திய அரசு.ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.3,112 கோடி, நெல் கொள்முதல் மற்றும் மானியங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.2,670 கோடி, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால், 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் ரூ.3,548 கோடி எனத் தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. இந்த நிதி மாசுபாட்டை நீக்கி, மக்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும்" -மாநிலங்களவையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் பேச்சு
இந்தியா வருகிறார் புதின்
ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (டிச.04) இந்தியா வருகிறார்.மாலை 4.30 மணிக்கு டெல்லி வந்ததும், புதினுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து வழங்க உள்ளார். இதை தொடர்ந்து நாளை 23வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் இருவரும் பங்கேற்க உள்ளனர்.
ரயில் பயணிகள் கவனத்திற்கு..
ரயில் நிலையங்களில் தட்கல் டிக்கெட் வாங்க இனி OTP கட்டாயம் என ரயில்வே துறை அறிவிப்பு.மக்கள் தங்களது எண்ணுக்கு அனுப்பப்படும் OTPஐ தெரிவித்த பிறகே டிக்கெட் முன்பதிவாகும்.52 ரயில் நிலையங்களில் சோதனை முறையில் உள்ள இந்த நடைமுறை விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிப்பு.
டெல்லியில் பாமக ஆர்பாட்டம்
பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தை கண்டித்து, டெல்லி ஜந்தர்மந்தரில் ராமதாஸ் தரப்பு இன்று ஆர்ப்பாட்டம். ராமதாஸ் தரப்பின் செயல் தலைவர் ஸ்ரீ காந்தி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
டிடி தலைவர் திடீர் ராஜினாமா
தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை நிர்வகிக்கும் 'பிரசார் பாரதி' நிறுவனத்தின் தலைவர் நவ்னீத் குமார் செகல் திடீர் ராஜினாமா. கடந்த மார்ச் மாதம் தலைவராக பதவியேற்ற நவ்னீத் செகல், வெறும் 9 மாதங்களில் பதவியை ராஜினாமா செய்திருப்பது பல்வேறு விவாதங்களை கிளப்பி உள்ளன.
15 வயதில் சாதித்த சிறுவன்
மிக இளம் வயதில் குவாண்டம் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று ஒட்டுமொத்த அறிவியல் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் 15 வயது சிறுவன் லாரண்ட் சைமன்ஸ்! 2009ம் ஆண்டு பெல்ஜியத்தில் பிறந்த லாரண்ட், 8 வயதில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பையும், 12 வயதில் இயற்பியலில் முதுகலைப் பட்டத்தையும் முடித்து, தற்போது Antwer பல்கலைக்கழகத்தில் குவாண்டம் இயற்பியலில் முனைவர் பட்டம் (PhD) பெற்றுள்ளார்.
தடுமாறும் இங்கிலாந்து
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஷ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது. பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆக, 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. க்ராவ்லி மற்றும் ரூட் நிதானமான ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டு வருகின்றனர்.