இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனங்களில் ஒன்று ஸ்விக்கி. இந்த தளத்திலும் பலரும் உணவு ஆர்டர் செய்து வருகின்றனர். அப்படி ஆர்டர் செய்யும் ஒரு சிலருக்கு அவ்வப்போது சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஸ்விக்கியில் காஃபி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டர் வரும் போது அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அவர் காஃபி டேயிலிருந்து காஃபியை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு டன்சோ டெலிவரி நபர் அழைத்துள்ளார். அவருடைய காஃபியை எடுத்து வந்து தந்துள்ளார். அப்போது அவருக்கு பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் ஸ்விக்கி டெலிவரி நபர் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அதில் நான் உங்களுடைய ஆர்டரை டன்சோ மூலம் அனுப்பியுள்ளேன். அதை வாங்கிவிட்டு எனக்கு 5 ஸ்டார் ரேட்டிங் செய்துவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இவ்வளவு சோம்பேரியான டெலிவரி நபரை நாங்கள் பார்த்ததே இல்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்தப் பதிவை பலரும் லைக் செய்து ரீட்வீட் செய்து வருகின்றனர். ஒரு சிலர் அந்த டெலிவரி நபரின் சாமர்த்தியத்தையும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்