இன்றைய இந்தியா என்பது பின்னோக்கி பறந்து கொண்டிருக்கும் விமானத்தைப் போன்றது என்று எழுத்தாளர் அருந்ததி ராய், இந்தியாவில் நடக்கும் செயல்களை விமர்சனம் செய்துள்ளார்.


மனித உரிமைகள் போராளி ஜி.என். சாய்பாபா (GN Saibaba) சிறையில் இருந்து எழுதிய என்னுடைய பாதையை பார்த்து நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்? "Why do you fear my way so much?" என்ற கவிதை மற்றும் கடித இலக்கிய தொகுப்பின் புத்தக வெளியீட்டு விழாவில்  புக்கர் பரிசு வென்ற எழுத்தாளரான அருந்ததி ராய் கலந்து கொண்டார்.


இந்நிகழ்வில், எழுத்தாளர் அருந்ததி ராய் இந்தியாவின் இன்றைக்கும் இருக்கும் நிலை குறித்தும், நாட்டில் நிலவிவரும் பிரச்சினைகள் குறித்தும் பேசியுள்ளார்.


அருந்ததி ராய் புத்தக வெளியீட்டு விழாவில் பேசுகையில், 1960-களில் நாட்டில் உள்ள வளங்களையும், நிலங்களையும் பிர்த்துக்கொடுக்க உண்மையாக புரட்சிகரமாக இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், இன்றைய இந்தியாவில் தலைவர்கள் வாக்களர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ உப்பு கொடுத்து தேர்தல்களை வென்று வருகின்றனர். வாக்காளர்களிடம் வாக்கு கேட்கவும் இதையே செய்கின்றனர்.


சமீபத்தில்,விமான ஓட்டுநரானா என் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.’ விமானத்தை உங்களால் பின்னோக்கி இயக்க முடியுமா? என்று. என் கேள்விக்கு அவர் சத்தமாக சிரித்து விட்டார்.  அவரிடம் சொன்னேன். ‘இன்று இந்தியாவில் நடந்து கொண்டிருப்பதும், ஒரு விமானத்தை பின்னோக்கி பறக்க செய்வதை போன்றதுதான்.’


இந்தியாவின் ஆட்சியையும், செயல்பாடுகளையும் குறிப்பிடுகையில், அருந்ததி ராய் சொல்கிறார், ‘ இந்த நாட்டின் தலைவர்கள் விமானத்தை பின்னோக்கி இயக்கி கொண்டிருக்கிறார்கள். அதானல் எல்லாம் கீழே விழுந்து கொண்டிருக்கிறது. விபத்துக்குள்ளாக இருக்கிறோம்.


இந்தியா என்பது வசதிக்கேற்றப்படி, வளைந்து நீதி வழங்கும் நாடாக இருக்கிறது. இந்தியாவில் சட்டம் செயல்படுத்தப்படும்போது, அவரவர் சாதி, பாலினம், இனம், பொருளாதாரம், பிரிவு உள்ளிட்டவைகளின் அடிப்படையிலே நடந்தேறுகிறது.


அதற்கு உதாரணம், இன்று இந்தியாவில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது? 90 சதவீதம் உடல் செயல்பாடுகள் முடங்கிக்கிடக்கும் ஒரு நபருக்கு ஏழாண்டுகளாக சிறை தண்டணை வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் இங்கு நடக்கிறது. இனிமேல், இதை பற்றி பேசுவதால் ஏதும் ஆகபோவதில்லை. நாம் எப்படியான நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒன்றே போதுமானது. இது வெட்கப்படவேண்டிய ஒன்று.” என்று குறிப்பிட்டு அருந்ததி ராய் பேசினார்.


ஜி.என். சாய்பாபா என்பவர் சக்கர நாற்காலி துணை கொண்டு வாழ்ந்து வருபவர். இவருக்கு மாவோயிஸ்டுடன் தொடர்ப்பு இருப்பதாககவும், நாட்டுக்கு எதிராக போர் தொடுத்ததாகவும் கூறி, கடந்த 2017 ஆம் ஆண்டு மஹாராஷ்டிராவின் கட்ஜ்ஜிரோலி நீதிமன்ற அவருக்கு தண்டனை வழங்கியது.


இந்த குற்றச்சாட்டால், டெல்லியில் பல்கலைக்கழகத்தில் இவர் பணியாற்றி வந்த உதவி பேராராசிரியர் பதவியும் கடந்த மார்ச் 31 ஆம் தேதி பறிக்கப்பட்டது. தற்போது, சிறையில் இருந்த காலத்தில் இவர் எழுதிய கடிதங்கள் மற்றும் கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்துள்ளது.