பெங்களூருவில் தண்வாளத்தை கடக்க முயன்ற போது பிஎம்டிசி பேருந்து திடீரென பழுதாகி நின்ற நிலையில் அந்த நேரத்தில் அதிவேகமாக வந்த வந்தே ரயிலை நிறுத்தி பயணிகளை காப்பற்றிய பரபரப்பு சம்பவம் நடைப்பெற்றுள்ளது. 

தண்டவாளத்தில் சிக்கிய பேருந்து:

கர்நாடகவின் புறநகர் பகுதியான கெங்கேரியில்க் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 7:15 மணியளவில் ராமோஹள்ளி ரயில்வே கிராசிங் அருகே இந்த சம்பவம் நடந்ததாக பிஎம்டிசி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆர்.ஆர் நகர் பணிமனையை சேர்ந்த பேருந்து (KA57 F2939), வழித்தடம் எண். 227ஜே/1 (மாலிகொண்டனஹள்ளி - கேஆர் மார்க்கெட்)-இல் இயக்கப்பட்டது, இந்த நிலையில் பேருந்தானது தண்டவாளத்தை கடக்கும்போது சிக்கிக் கொண்டது.

"ஓட்டுநர் ஈஸ்வரியா, அடுத்த கியரில் பேருந்தை ஸ்டார்ட் செய்ய முயன்றபோது, ​​ஏர்லாக் பிரச்சினை காரணமாக அது தண்டவாளத்தில் நின்றது. பலமுறை முயற்சித்த போதிலும், பேருந்து முன்னோக்கி நகரவோ அல்லது மீண்டும் தொடங்கவோ இல்லை," என்று BMTC அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

உடனடியாக ஓட்டுநர் BMTC மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் ஹெஜ்ஜாலா மற்றும் கெங்கேரி இடையேயான ரயில்வே கேட்டில் காலை 7:15 மணியளவில் பேருந்து சிக்கிக் கொண்டதாகவும், 7:35 மணிக்குள் பேருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தென்மேற்கு ரயில்வே (SWR) அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உதவிய தொழில்நுட்பம்:

பெங்களூரு கோட்ட ரயில்வே மேலாளர் அமிதேஷ் குமார் சின்ஹா ​​கூறுகையில், "பிஎம்டிசி பேருந்து லெவல் கிராசிங் கேட்டில் சிக்கிக் கொண்டது. அந்த கேட்டில் பாதுகாப்பு இன்டர்லாக் சிஸ்டம் இருந்தது. இதன் பொருள், கேட்டில் ஏதேனும் தடை இருந்தால், சிக்னல் ரயிலை கடந்து செல்ல அனுமதிக்காது, இது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது."

"அதன்படிரயில்வேயின் நிலையான பாதுகாப்பு நெறிமுறையைப் பின்பற்றி ரயில் நிறுத்தப்பட்டது. BMTC பேருந்து அதன் பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக லெவல் கிராசிங் கேட் வழியாகச் செல்லும்போது சிக்கிக் கொண்டது. பின்னர் அது BMTC கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டது," என்று அவர் கூறினார்.

ரயில்கள் தாமதம்

பேருந்து சிக்கிக்கொண்டதால் இதைத் தொடர்ந்து, ரயில் எண் 20663 மைசூர்-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் காலை 7:18 மணி முதல் 7:53 மணி வரை (35 நிமிடங்கள்) லெவல் கிராசிங்கில் நிறுத்தப்பட்டது, மேலும் ரயில் எண் 12785 கச்சேகுடா-மைசூர் எக்ஸ்பிரஸ் காலை 7:23 மணி முதல் 7:53 மணி வரை (30 நிமிடங்கள்) தாமதமானது.

நிலைமை குறித்து எச்சரிக்கப்பட்ட BMTC அதிகாரிகள், சிக்கித் தவித்த பேருந்தை அகற்ற ஒரு மெக்கானிக் மற்றும் ஒரு இழுவை வாகனத்தை அனுப்பினர். "ஓட்டுநர் வாகனத்தை கியரில் இயக்க முயன்றார், இதனால் தான் ஏர்லாக் ஏற்பட்டு, அது ரயில் பாதையில் சிக்கிக் கொண்டது. உடனடியாக, ரயில்வே அதிகாரிகள் மற்றும் BMTC க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கெங்கேரி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு விபத்துக் குழுவினர் மற்றும் மெக்கானிக்குகள் அனுப்பப்பட்டனர், மேலும் பேருந்து இழுத்துச் செல்லப்பட்து, ஏர்லாக் விடுவிக்கப்பட்டு சென்றது.