சர்ச்சைக்குரிய வக்ஃப் வாரிய மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் நிறைவேற்றப்பட்டது வக்ஃப் மசோதாவுக்கு 288 பேர் ஆதரவாகவும், 232 பேர் எதிர்ப்பும் தெரிவித்த நிலையில் நிறைவேற்றம் வக்ஃப் சொத்துகளை அரசு அபகரிக்க முயற்சிப்பதாக மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம்

நாளை நடக்கும் பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம்.பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன; உச்சி மாநாட்டுக்குப்பின் தாய்லாந்தின் 6 சிறந்த கோயில்களில் ஒன்றான வாட்போவை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். 

நண்பனா இருந்தாலும் வரி

இந்தியாவுக்கு 26% வரி விதிக்க முடிவு: ட்ரம்ப் அமெரிக்காவுக்கு 52% வரி விதிக்கும் இந்தியாவுக்கு பரஸ்பர வரியாக 26% விதிக்க முடிவு சீனாவுக்கு 34%, வியட்நாமிற்கு 46%, தைவானுக்கு 32%, ஜப்பானுக்கு 24% பரஸ்பர வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். 

வக்ஃப் மசோதா: திமுக வழக்கு

வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயல் நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றியதற்கு கடும் கண்டனம் முதல்வர் மு.க.ஸ்டாலின். சட்டப்பேரவை நிகழ்வில் கருப்பு பட்டை அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மேலும் திமுக சார்பில் இந்த மசோதா குறித்து வழக்குத்தொடரப்படும் என அறிவிப்பு.

குஜராத் வெற்றி:

பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குஜராத் அணி. இந்த தோல்வியின் மூலம் முதல் இடத்தில் இருந்த பெங்களூரு அணி 3வது இடத்திற்கு சரிவு

விமான விபத்து: 

குஜராத்தின் ஜாம்நகர் அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்து. இந்த விமானத்தில் இருந்த 2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில்  மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி. 

டெல்லி எய்ம்ஸில் லாலு பிரசாத்:

ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவிற்கு திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு எதிர்ப்பு:

அமெரிக்கா புதிதாக அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு முறை தவறானது. இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி  எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலு,ம் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து நாடுகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. 

இன்றைய ஐபிஎல் போட்டி:

ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிப்பெறும் அணி புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் முன்னேறும். 

ரயில்கள் ரத்து: 

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் வழித்தடத்தில் பொன்னேரி - கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (ஏப்.03) மற்றும் ஏப்ரல் 5ம் தேதிகளில் 21 புறநகர் ரயில்கள் ரத்து.அந்நாட்களில் பயணிகள் வசதிக்காக 10 சிறப்பு ரயில்கள் சென்னை - எண்ணூர் இடையே இயக்கப்படும் என அறிவிப்பு