Actress Chethana Raj Death: அதிர்ச்சி.. விபரீதத்தில் முடிந்த கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சை : 21 வயது நடிகை சேத்தனா ராஜ் திடீர் மரணம்..

21 வயதான கன்னட நடிகை சேத்தனா ராஜ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பின்பு உயிரிழந்துள்ளார்.

Continues below advertisement

21 வயதான கன்னட நடிகை ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பின்பு உயிரிழந்துள்ளார்.

Continues below advertisement

கன்னட தொலைக்காட்சி நடிகை சேத்தனா எடை குறைப்பு தொடர்பான அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்பு, அவர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய மரணத்திற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையும், அலட்சியமுமே காரணம் என்று அவருடைய பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் சேத்தனா இந்த சிகிச்சைக்கு சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சேத்தனா நேற்று காலை பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்தவர்கள் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருந்தனர். அதன்பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு அவசர உதவியை மருத்துவர்கள் அளித்துள்ளனர். எனினும் அவரை மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியவில்லை. அவருக்கு  மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சேத்தனா கன்னட தொலைக்காட்சி தொடர்களான கீதா மற்றும் தோரசனி ஆகியவற்றில் நடித்துள்ளார். இவருடைய திடீர் மரணத்திற்கு கன்னட தொலைக்காட்சி நடிகர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவருடைய மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் திடீர் மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த நடிகையின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement