கர்நாடக மாநிலத்தில் சமூக வலைதளத்தில் தங்கள் வீட்டு பெண்ணுடன் மெசேஜில் பேசியதற்காக இளைஞர் ஒருவரை இரண்டு நாட்கள் கடத்தி நிர்வாணமாக்கி, அடித்து தாக்கி ஊர்வலம் இழுத்துச்சென்ற சம்பவம் தொடர்பாக, இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கர்நாடக மாநிலாம் தவாங்கரே (Davangere) என்ற மாவட்டத்தைச் சேந்தவர், கணேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சமூக வலைதளத்தில் பேசி வந்துள்ளார். இருவரும் அவரவர் விருப்பத்தின் பெயரிலேயே மெசேஜ் செய்து வந்துள்ளனர். 


இந்நிலையில்,அந்தப் பெண் வீட்டினர், கணேஷ் வீட்டிற்குச் சென்று, அவரை இழுத்துச் சென்றிருக்கின்றனர். 20 வயதான கணேஷை திருமணம் மண்டபம் ஒன்றில் வைத்து, அவரை நிர்வாணப்பத்தி, கும்பலாக சேர்ந்து அடித்து துன்புறுத்தி  ஊர்வலமாக அழைத்துச்சென்றுள்ளனர். இரண்டு நாட்கள் அவரை அடித்து சித்திரவதை செய்துள்ளனர் என போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து கணேஷ் தாயார் கூறுகையில், ”என் வீட்டிற்கு வந்து கணேஷை ஏன் அவர்கள் அழைத்துச் சென்றார்கள் என்று எனக்குத் தெரியாது. என் மகனை விட்டுவிடுமாறு அவரிடம் கெஞ்சியம் எந்த பயனும் இல்லை” என்றார். 


மேலும், வெள்ளிக்கிழமை கணேஷை அழைத்துச் சென்ற பெண்ணின் வீட்டார், கிராமத்தில் அவரை நிர்வாணமாக உலவ விட்டிருக்கின்றனர் என்று கணேஷ் தாய் வேதனையுடன் போலிசாரிடம் தெரிவித்திருக்கிறார். 


இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கூறுகையில், “கணேஷ் மற்றும் அவரது தோழி இருவரும் சமூக வலைதளம் மூலம் வெகு காலமாக பேசி வந்துள்ளனர். ஆனால், அந்தப் பெண் வீட்டில் அவர்களின் மெஜேசைப் பார்த்துவிட்டு, கணேஷை துன்புறுத்தியுள்ளனர்“ என்றார். 


அந்த நபரை, பெண் வீட்டைச் சேர்ந்த கும்பல் அடித்து உதைத்து, துன்புறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாக்கியுள்ளனர். இந்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண