தமிழ்நாடு:
- பருத்தி நூல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
- 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- நெல்லை கல் குவாரி விபத்தில் மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
- மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.
- பிற மாநிலங்களிலுள்ள பல்கலைக் கழகங்களில் தமிழுக்கு இருக்கை அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இந்தியா:
- அமைச்சர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று உத்தரபிரதேச அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.
- அசாமில் பெய்த தொடர் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
- மாநிலங்களவை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
- உத்தரக்காண்டில் கனமழை காரணமாக மரங்கள் விழுந்து சாலை போக்குவரத்து பாதிப்பு.
- அருணாச்சலப் பிரதேச எல்லை அருகே சீனா கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்.
- பங்குச்சந்தையில் இன்று எல்.ஐ.சியின் பங்குகள் இன்று அறிமுகமாகிறது.
- வட இந்தியாவில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகம்:
- இலங்கையில் இன்னும் ஒரு நாளுக்கு தேவையான பெட்ரோல், டீசல் மட்டுமே கையிருப்பு உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.
- ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள கார்கிவ் நகரிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் வீடியோ வெளியிட்டுள்ளது.
- அமெரிக்கா,ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து உதவிக்கு உக்ரைன் வந்த ஆயுதங்களை ரஷ்ய ஆதரவு படையினர் கைப்பற்றியுள்ளனர்.
- இந்தியா-நேபாள் இடையேயான உறவு இமயமலையை போன்றது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாட்கள் பயணமாக ஜமைக்கா சென்றுள்ளார்.
- பிரான்சு நாட்டின் புதிய பிரதமராக எலிசெபத் அறிவிக்கப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் பெண் பிரான்சு பிரதமராக எலிசெபத் பதவியேற்க உள்ளார்.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
- தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்த லக்ஷ்யா செனிற்கு கர்நாடகா அரசு 5 லட்சம் ரூபாய் பரிசை அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்