அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 28)  வங்கி சேவைகள் முடங்கியுள்ளது.


அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று (ஆகஸ்ட் 28) நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால், நாடு முழுவதும் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பதின்மூன்று தொழிற்சங்க அலுவலகப் பணியாளர்கள் மீதும் இந்தியன் வங்கியின் குற்றப்பத்திரிக்கையின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.


இன்று வங்கி வேலைநிறுத்தம்:


AIBEA இன் பொதுச் செயலாளர் CH வெங்கடாசலம், வங்கி வேலைநிறுத்தம் குறித்து பேசியுள்ளார். அதில்,"அரசியல் அழுத்தத்தின் கீழ் பாங்க் ஆஃப் இந்தியா ஸ்டாஃப் யூனியன்-கேரளாவின் அனைத்து 13 அலுவலக அதிகாரிகளையும் சார்ஜ் ஷீட் செய்த பேங்க் ஆஃப் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிரான எங்கள் எதிர்ப்பைக் காட்டவே முன்மொழியப்பட்ட வேலைநிறுத்தம்" என்று AIBEA பொதுச் செயலாளர் CH வெங்கடாசலம் கூறியுள்ளார்.





கார்கில் போரில் பங்கேற்ற 3 பேர் உட்பட குற்றப்பத்திரிகையில் உள்ள நான்கு பேர் முன்னாள் ராணுவத்தினர் என்றும் அவர் கூறினார்.