அன்பு அத்தனை அற்புதங்களையும் நிகழ்த்திவிடும் என்று சொல்வது சும்மாவா என்னா? ’அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்று வள்ளுவர் அனுபத்தில்தான் எழுதியிருப்பாரென்று தோன்றுகிறது. காதல் சுவாரஸ்யங்கள் நிறைந்தது. அப்படி ஒரு நிகழ்வு உங்கள் பார்வைக்கு.


 காதலுக்காக நீங்கள் என்னெவெல்லாம் செய்வீர்கள்? எந்த எல்லை வரை செல்வீர்கள்? இந்த சுவாரஸ்யமான கதை நிச்சயம் உங்களை நெகிழ்சியடைய செய்யும்.


வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் காதலுக்காக எதுவும் செய்வேன் என்று தன் செயல் மூலம் உணர்த்திருயிருக்கிறார். இதை தன் காதலை நிரூப்பித்திருக்கிறார் என்று சொல்லிவிட முடியாது. அவர் காதலின் வெளிப்பாட்டை நாம் கொண்டாடலாம்.


பங்காளாதேஷைச் சேர்ந்த கிருஷ்ணா மண்டல் (krishna Mandal), மேற்கு வங்கத்தில் வசிக்கும் அபிக் மண்டல் (Abhik Mandal) இருவரும் சமூக வலைதளத்தில் அறிமுகமாகி நண்பர்களாகினர். பின்னர், இருவருக்கும் காதல் மலர்ந்தது. மீதமுள்ள வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து பயணிக்க முடிவெடுத்தனர். ஆனால், அபிஷேகிடன் பங்களாதேஷ் செல்வதற்கு பாஸ்போர்ட் இல்லை. அவர் பங்களாதேஷ் நாட்டிற்கு செல்வதற்கு சட்டபூர்வமான வழி மட்டுமே இருந்தது. ஆனால், தன் இணையைத் தேடி, அவருடம் மீதமுள்ள வாழ்வை வாழ பங்களாதேஷ்-இல் மாங்குரூவ் சுந்தரவனக் காடுகள் வழியாக  sunderbans பகுதியில் உள்ள மால்டா நதியில் நீந்தி இந்தியா வந்திருக்கிறார். 


இந்த வழியில் வனவிலங்குகள் ஆபத்து இருப்பது தெரிந்தும், தன் காதலுக்காக கடல் கடந்து வந்திருக்கிறார், கிருஷ்ணா மண்டல். 


ஆபத்தான விலங்குகள் வசிக்கும் சுந்தரவனக் காட்டின் வழியாக பயணம் செய்திருக்கிறார். சுந்தரவனக் காடுகளை அடைந்த பிறகு, கிருஷ்ணா இலக்கை அடைய மேலும் ஒரு மணி நேரம் ஏரிகளின் வழியாக நீந்தியிருக்கிறார். அபிக் இவர் வருகைக்காக காத்திருந்தார்.


அவர் தனது காதலர் அபிக் என்பவரை சந்தித்து, பின்னர் கொல்கத்தாவில் உள்ள காளிகட் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்ததாக கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணா தற்போது பங்களாதேஷ் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க:




Curd Rice : என்னது? தயிர் சாதம் சாப்பிட்டா இது சேதமா? நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா.


KK Death News : KK-வின் திடீர் மரணத்தில் மர்மம்...! வழக்குப்பதிவு செய்த கொல்கத்தா போலீஸ்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண