Bangladesh Protests: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்துள்ள வன்முறையில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியர்களுக்கு எச்சரிக்கை:


வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டு சீர்திருத்தங்கள் தொடர்பாக வெடித்துள்ள புதிய வன்முறையால்,  அங்கு சுமார் 100 வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்தியர்கள் வங்கதேசம்  செல்வதைத் தவிர்க்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே அங்குள்ள இந்திய குடிமக்கள் "அதிக எச்சரிக்கையுடன்" செயல்படவும், அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 


"தற்போதைய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய பிரஜைகள் மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்திற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று வெளியுறவு அமைச்சக அற்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்பட்டால், +8801958383679; +8801958383680; +8801937400591 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம், டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.






வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை:


பாகுபாட்டிற்கு எதிரான மாணவர்கள் என்ற தலைப்பின் கீழ் "ஒத்துழையாமை இயக்கத்தை" மையமாகக் கொண்ட, புதிய போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது. அததொடர்ந்து,  நாட்டின் பல பகுதிகளில் வெடித்த தொடர்ச்சியான மோதல் சம்பவங்களால் சுமார் 100 பேர் வர உயிரிழந்துள்ளளனர். ஏராளமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதிய கலவரத்தின் போது சிராஜ்கஞ்சின் எனயட்பூர் காவல் நிலையத்தில் நடந்த தாக்குதலில் 13 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. 


இதையும் படியுங்கள்: சாலையில் அசுரனாக காட்சியளிக்கும் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் - ரூ.10 லட்சம் பட்ஜெட், டாப் 5 மாடல்கள்


காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு:


ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் போராட்டக்காரர்களுக்கும், அவாமி லீக் உறுப்பினர்களுக்கும் இடையே நடந்த மோதலில் பலர் இறந்தனர். தலைநகர் டாக்காவில், அவாமி லீக் உறுப்பினர்களுடன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் மாணவர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது. 


இதனிடையே, "இப்போது தெருக்களில் போராட்டம் நடத்துபவர்கள் மாணவர்கள் அல்ல, ஆனால் தேசத்தை சீர்குலைக்க முயலும் பயங்கரவாதிகள்" என்று தேசிய பாதுகாப்பு குழுவின் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டினார். தொடர்ந்து, போராட்டக்காரர்களை "பயங்கரவாதிகள்" என்று கூறிய பிரதமர் ஷேக் ஹசீனா, பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், வங்கதேசம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே,  அதிகரித்து வரும் வன்முறையைக் கருத்தில் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி (1200 GMT) முதல், நாடு முழுவதும் காலவரையற்ற  ஊரடங்கு உத்தரவை வங்கதேச உள்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.