Best Sports Bikes: 10 லட்ச ரூபாய் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் கிடைக்கும், டாப் 5 ஸ்போர்ட்ஸ் பைக்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கவாஸகி நின்ஜா 650:
கவாஸகி நின்ஜா 650 மாடல் மோட்டார்சைக்கிளின் விலை இந்திய சந்தையில் ரூ.7.16 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இதில் உள்ள 649 சிசி இன்ஜின், 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 67.3 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துகிறது. 196 கிலோ எடை கொண்ட இந்த வாகனம், 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை பெற்றுள்ளது. லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் வழங்குகிறது. 790 மிமீ உயர இருக்கையை கொண்டுள்ளது.
கவாஸகி Z650:
கவாஸகி இசட்650 மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ.6.65 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இதில் உள்ள 649 சிசி இன்ஜின், 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 67.31 பிஎச்பி ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. 191 கிலோ எடை கொண்டது. இந்த பைக் லிட்டருக்கு 21 முதல் 22 கிமீ மைலேஜ் வழங்குகிறது. 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க், மற்ரும் 790 மிமீ உயர இருக்கையை கொண்டுள்ளது.
டிரையம்ப் ட்ரைடென்ட் 660:
டிரையம்ப் ட்ரைடென்ட் 660 மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ.8.25 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இதில் இடம்பெற்றுள்ள 660 சிசி இன்ஜின், 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 189 கிலோ எடை கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது, 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் மற்றும் 805 மிமீ இருக்கை உயரம் ஆகியவற்றை வழங்குகிறது.
KTM RC390
KTM RC 390 மாடல் மோட்டார்சைக்கிளின் விலை இந்திய சந்தையில், ரூ. 3.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இது 373.27 cc இன்ஜினைக் கொண்டுள்ளது.அது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது, ARAI தரநிலைகளின்படி, இந்த கேடிஎம் வாகனம் லிட்டருக்கு 29 கிமீ மைலேஜை வழங்குகிறது. இந்த பைக்கில் 172 கிலோ எடையும், 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கையும் கொண்டுள்ளது. இதன் இருக்கை உயரம் 835 மிமீ, ஸ்போர்ட்டி ரைடிங் பொசிஷனை வழங்குகிறது.
யமஹா R3
யமஹா ஆர்3 மாடல் மோட்டார்சைக்கிளின் விலை இந்திய சந்தையில் ரூ.4.64 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இதில் வழங்கப்பட்டுள்ள 321 சிசி இன்ஜின், 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், 41.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த வாகனம், லிட்டருக்கு 29.3 கிமீ மைலேஜை வழங்குகிறது. 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் உடன், 780 மிமீ இருக்கை உயரத்தையும் பெற்றுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI