அங்கே மனைவியின் சடலம் சிதையில் எரியூட்டப்பட்டுக் கொண்டிருக்க, டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் பத்ம விருதுகளைப் பெற்றார் எழுத்தாளர் பாலன் புத்தேரி.


இந்துமத சம்பிரதாயங்கள், கோவில்கள் உள்ளிட்டவை தொடர்பான 200க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 200க்கும் கண்பார்வை தெரியாத மாற்றுத் திறனாளிதான் பாலன் புத்தேரி.  


மத்திய அரசு கடந்த 1954 ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். 
இவை குடிமுறை சார்ந்தவர்களுக்கான விருதுகள். அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.


பாரத ரத்னா உள்ளிட்ட பத்ம விருதுகளுக்கு, பணம் எதுவும் கிடையாது. பட்டம் மாதிரி இவற்றை பெயரோடு சேர்த்துக்கொண்டு விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது. ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான விழா நடத்தி அரசு இவ்விருதை வழங்குகிறது.


இந்தாண்டு எழுத்தாளர் பாலன் புத்தேரிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. விருது வாங்க மகிழ்ச்சியாக செல்ல வேண்டிய புத்தேரி மனம் கலங்கி நொந்து போய் சென்றார்.




பாலன் புத்தேரி 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுத ஊக்கமளித்து உதவியவர் அவரின் மனைவி சாந்தா. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சாந்தா, நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை உயிரிழந்தார்.
ஆனால் தன் கணவர் பாலன் புத்தேரி பத்ம ஸ்ரீ விருது வாங்குவதை கண்ணாரக் கண்டு ரசிக்கக் காத்திருந்தவரை புற்றுநோய் இரக்கமில்லாமல் வாரி சுருட்டிச் சென்றது.  


தனது மனைவியின் கடைசி ஆசையான பத்ம ஸ்ரீ விருது வாங்காமல் வரக்கூடாது என்பதற்காக மனைவியின் இறப்புச் செய்தி கேட்டபின்பும்,  பாலன் புத்தேரி குடியரசுத் தலைவரிடம் விருதைப் பெற்றார்.


இந்தச் செய்தியை அறிந்தவர்கள் அனைவருமே நெகிழ்ந்து போயினர். கணவருக்காக புத்தகங்களை எழுதிய மனைவியும், மனைவிக்காக விருதைப் பெறச் சென்ற பாலன் புத்தேரியும் ஆதர்ச தம்பதிகளுக்கான எடுத்துக்காட்டு.


இந்து மதம், கோவில்கள் தொடர்பான நூல்களை எழுதியதால் இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அதனடிப்படையில்தான் பாலன்புத்தேரிக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.