அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள பெயரில்லா 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) சூட்டுகிறார்.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பங்காற்றியவர்களுள் ஒருவராக சுபாஷ் சந்திர போஸின் ( Netaji Subhas Chandra Bose) பிறந்தநாளான இன்று (23, ஜனவரி) ‘பராக்ரம திவாஸ்’ (Parakram Diwas) தினமாக கொண்டாட்டப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பெயர் இல்லாத தீவுகளுக்கு பிரதமர் மோடி பெயர் சூட்ட உள்ளார்.
நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களது வலிமையை வெளிப்படுத்திய இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய ராணுவ விருதான பரம் வீர் சக்ரா விருதினை பெற்ற 21 வீரர்களின் பெயர் இந்த 21 தீவுகளுக்கு வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2018 ஜனவரி வரை 21 பேர் பரம் வீர் சக்ரா விருதினை பெற்றுள்ளனர். 20 பேர் இந்திய ராணுவத்தில் இருந்தும், ஒருவர் இந்திய விமானப்படையில் இருந்தும் இந்த விருதினை பெற்றுள்ளனர்.
பரம் வீர் சக்ரா விருது பெற்ற இராணுவ வீரர்கள்:
மேஜர் சோம்நாத் ஷர்மா, கேப்டன் கரம் சிங், லெப்டினென்ட் ரமா ராஹ்போக் ரானே, நாயக் ஜதுநாத் சிங், மேஜர் பிரு சிங்,கேப்டன் ஜி.எஸ். சலாரியா, லெப்டினென்ட் தண் சிங் தப்பா, கோஜிந்திர சிங், மேஜர் சைதான் சிங், அப்துல் ஹமீத், அர்தேஷீர் பர்ஜோர்ஜி தராபூர் (Ardeshir Burzorji Tarapore), ஆல்பெர்ட் எக்கா, மேஜர் ஹோசையர் சிங், அருண் கேத்ராபால், ஃப்ளையிங் ஆபிசர் நிர்மல்ஜித் சிங் சேகான், மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன், கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினென்ட் மனோஜ் குமார் பாண்டே , பானா சிங், சஞ்சய் குமர், கேப்டன் யோகேந்திரச் சிங் யாதவ் பெயர்கள் இந்த தீவுகளுக்கு வைக்கப்பட உள்ளன.
பராக்ரம திவாஸ் பிரதமர் மோடி ட்வீட்: