நோயாளியை மிரட்டி ரூ.20 லட்சம் பறிக்க முயன்றதாக தனியார் மருத்துவமனை செவிலி ஒருவர் கைது செய்யப்பட்டார். புகாரின்படி, டயாலிசிஸ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது செவிலியுடன் நோயாளிக்கு பழக்கம் ஏற்பட்டது.

20 லட்சம் ரூபாய் கொடுக்க மறுத்தால், பாதிக்கப்பட்டவரின் தனிப்பட்ட விவரங்களை பகிரங்கப்படுத்துவேன் என்று குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட நபரை மிரட்டிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதுகுறித்து அந்த நபர் அளித்த புகாரில், செவிலி தன்னை அவதூறாகப் பேசியும், மிரட்டியும் வருகிறார் எனக் கூறியுள்ளார். 20 லட்சத்தை கொடுக்க மறுத்தால், அவர்களின் தனிப்பட்ட சேட்டிங் செய்திகளை பகிரங்கப்படுத்துவேன் என்று பாதிக்கப்பட்ட நபரை மிரட்டியுள்ளார். அதுகுறித்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்துவேன் என செவிலி மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவரைப் பிடிப்பதற்காக காவல் துறையினர் காத்திருந்தனர். கடந்த வியாழன் அன்று புனேயின் ரஹத்னியில் உள்ள ஷிவார் சௌக்கில் பணம் எடுக்க வந்தபோது, ​​வாகாட் காவல் துறையினர் பொறி வைத்து அவரை கைது செய்தனர். இந்திய சட்டப்பிரிவு 384 மற்றும் 385 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் சம்பம் குறித்து விவரித்த உதவி ஆய்வாளர் சந்தோஷ் பாட்டீல், முறையான சிகிச்சைக்காக டயாலிசிஸ் மையத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால், புகார்தாரர் செவிலியுடன் பழகினார். இதையடுத்து இருவரும் ஃபோனில் பேச ஆரம்பித்து காலப்போக்கில் அவர்களுக்குள்ளான நட்பு வளர்ந்தது என்றார்.

மேலும், செவிலி கைது செய்யப்பட்டதைப் பற்றி வகாட் காவல் துறையின் மூத்த ஆய்வாளர் விவேக் முகலிகர் கூறுகையில், பெண்களை ஏமாற்றி அவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவேன் என அவர் மிரட்டியதாக கூறினார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: sexual abuse : ஜிம்மில் வைத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது, சிறுவன் தப்பியோட்டம்

Katra Kashmir Vaishnavi temple: கூட்டநெரிசல் சிக்கி 12 பேர் பலி: காஷ்மீர் வைஷ்ணோதேவி கோயிலில் நடந்தது என்ன?

Omicron | ஒமிக்ரான் அதிவேகத்தில் பரவும்.. தயாராய் இருங்கள் - எச்சரிக்கை மணியடிக்கும் தலைமை விஞ்ஞானி..

Watch Video | ''அடிக்குது குளிரு.. எடுடா போர்வைய.' பெட்ரூமில் மாடுகளை வளர்க்கும் பாசக்கார குடும்பம்..