அஸ்ஸாமில் சிவனை போல வேடமிட்டு வந்து தெருக்கூத்தில் நடித்த நபர் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி காவல்துறையினர் கைது செய்தனர்.


 






பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவனை போல வேடமிட்டு வந்து நடித்த பிரிஞ்சி போராவை கைது செய்துள்ளனர். அந்த நாடகத்தில் பார்வதி வேடமிட்டு ஒரு பெண்ணும் நடித்துள்ளார். இந்த நாடகத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


இருப்பினும், அவர்களின் செயலை விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற இந்து அமைப்புகள் விமர்சித்துள்ளன. அவர்களின் செயலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். பின்னர், மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், அரசியல் நோக்கங்களுக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும் போரா மீது புகார் அளித்தனர்.


 






புகாரை அடுத்து, பிரிஞ்சி போரா கைது செய்யப்பட்டு நாகோன் சதர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தெரு நாடகத்தில், பிரிஞ்சி போரா மற்றும் அவரது சக நடிகர் பரிஷிமிதா, சிவன் மற்றும் பார்வதி வேடமிட்டு, சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 


திடீரென, எரிபொருள் தீர்ந்து போனதால் வாகனம் நின்றுபோனது. இதைத் தொடர்ந்து, சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது, எரிபொருள் விலை உயர்வு மற்றும் பிற பிரச்னைகள் குறித்து மோடி அரசை விமர்சிக்க தொடங்குகிறார் சிவன் வேடமிட்ட போரா.


விலைவாசி உயர்வில் இருந்து விடுபட நரேந்திர மோடி அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட முன்வர வேண்டும் என அவர் நாடகத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். "ஆரம்பத்தில் அவர் தடுப்பில் வைக்கப்பட்டாலும் பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்" என்று காவல்துறை வட்டாரங்களில் தெரிவித்தன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண