Lalu Prasad Yadav : ரயில்வே பணி நியமன முறைகேடு வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி, மகளுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.


லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ​​ரயில்வேயின் குரூப் டியில் ஏராளமானோர் பணி நியமனம் செய்யப்பட்டனர். கடந்த 2004-2009 வரை லாலு ரயில்வே அமைச்சராக இருந்தபோது, அவரது குடும்பத்தினர், ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து நிலத்தை அன்பளிப்பாகவோ அல்லது குறைந்த விலையிலோ பெற்றதாக சிபிஐ தெரிவித்துள்ளது.


இந்த ஊழலில் லாலு யாதவின் மகனும் தற்போது பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக சிபிஐ கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தொடர்ந்து, ஜூலை மாதம் லாலுவின் சிறப்புதுறை அதிகாரியை கைது செய்தனர். , 


இந்நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரான பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதிக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.