Watch Video : ஓடிக் கொண்டிருக்கும் காரில் இருந்து ஒருவர் ரூபாய் நோட்டுகளை சாலையில் அள்ளிவீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி, ஷாகித் கபூர் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் தான் ஃபார்சி. தாத்தாவின் ஒரே சொத்தான பத்திரிக்கை அலுவலகம் கடனில் சென்று கொண்டிருப்பதால் அதனை காப்பாற்ற கள்ள ரூபாய் நோட்களை அச்சடித்து சப்ளை செய்யும் காட்சிகள் இதில் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில், அதே போன்று ஹரியானா மாநிலத்தில் கள்ள ரூபாய் நோட்களை ஓடிக் கொண்டிருக்கும் காரில் இருந்து ஒருவர் சாலையில் அள்ளிவீசும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குருகிராம் சாலையில் வேகமாய்ச் செல்லும் கார் ஒன்றில் பின்பக்கத்தில் உள்ள டிக்கியில் அமர்ந்தப்படி ஒருவர் ரூபாய் நோட்டுகளை அள்ளி சாலையில் வீசுகிறார். இதுகுறித்து குருகிராம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 'ஃபார்சி' வெப் சீரிஸில் வரும் காட்சியை போன்று அந்த நபர் வீடியோ உருவாக்க முயன்றுள்ளார்.
இதற்காக குரூகிராம் கோல்ப் மைதான சாலையில் காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை வீசி வீடியோ உருவாக்க முயன்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர் அடையாளம் காணப்பட்டு அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், காரில் அமர்ந்திருந்த 2 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோராவர் சில் கல்சி மற்றும் குர்ப்ரீத் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜோராவர் ஒரு பிரபல யூடியூபர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக, இதேபோல் கடந்த ஜனவரி 24ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.மார்க்கெட் சாலையில் வயதுமிக்க நபர் ஒருர் 10 ரூபாய் நோட்களை சாலையில் வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
ரூ.2400 கோடி, 2.37 லட்சம் சதுர அடி..! சென்னை விமான நிலையத்திற்கு புதிய முனையம்..! முழு தகவல்கள்