Aryan khan: நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கானின் வழக்கில் முறைகேடா?- கசிந்த சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை

போதை பொருள் வழக்கு தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டார்.

Continues below advertisement

கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி மும்பைக்கு வந்த சொகுசு கப்பலில் போதை பொருள் பார்டி நடப்பதாக தகவல் கிடைத்தை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு அந்த கப்பலில் சோதனை நடத்தியது. அதன்பின்னர் அக்கப்பலில் இருந்து 13 கிராம் கஞ்சா மற்றும் 1.33 லட்சம் பணம் ஆகியவற்றை கைப்பற்றியதாக கூறியது. அத்துடன் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் உள்பட 20 பேரை இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆர்யான் கானிற்கு கடந்த 30ஆம் தேதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

Continues below advertisement

இந்த வழக்கை விசாரித்து வந்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே சில முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவருடம் இருந்து அந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணை குழு தன்னுடைய அறிக்கையை விரைவில் சமர்பிக்க உள்ளது. 


இந்நிலையில் இந்த விசாரணை அறிக்கை தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யான் கானிடம் இருந்து எந்தவித போதை பொருட்களும் இல்லை என்று தெரியவந்துள்ளது. அதனால் அவருடைய மொபைல் போனை வாங்கி அதிலிருந்த சேட்களை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற போதும் அது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் போதை பொருள் தடுப்பு பிரிவின் சோதனை நடைமுறைகளின் படி இந்த சோதனை வீடியோ பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தனி தனியாக பிடிப்பட்ட போதை பொருட்களை ஒரே நபரிடம் பெற்றது போல் பதிவு செய்யப்பட்டுள்ளதும் விசாரணை குழு கண்டறிந்துள்ளது. 

அதேபோல் ஆர்யான் கானிற்கும்  சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது. இருப்பினும் போதை பொருளை பயன்படுத்தியதற்காக அவரை கைது செய்யலாமா என்பது தொடர்பாக சட்ட விளக்கம் பெற சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த அறிக்கை இம்மாதம் இறுதியில் தாக்கல் செய்யப்படும் என்று கருதப்படுகிறது. அப்போது ஆர்யான் கான் வழக்கில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான விவரம் முழுவதும் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க:வெளிநாட்டில் டாக்டர் படிக்கிற 90% மாணவர்கள் இந்தியாவில் ஃபெயில்.. அமைச்சர் சொன்ன புள்ளிவிவரம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement