இந்தியாவின் 75வது சுதந்திர தினத்திற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடந்த ஓராண்டாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு விழா ஒன்று நடைபெற்றது. அந்தவிழாவில் அம்மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாரதியார் பாடலை தமிழில் அழகாக பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 


 


இது தொடர்பாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பிரேமா கந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், “அருணாச்சலப் பிரதேச சகோதரிகள் பாரதியார் எழுதிய தமிழ் தேசபக்தி பாடலை பாடியதை கேளுங்கள்” எனப் பதிவிட்டிருந்தார். அருணாச்சலப் பிரதேச முதல்வரின் இந்தப் பதிவை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி தன்னுடைய பாராட்டை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


 






இது தொடர்பாக பிரதமர் மோடி, “இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள்” எனப் பதிவிட்டுள்ளார். 


 






இந்த வீடியோவை பலரும் பார்த்து அவர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர். தேசப்பற்றுக்கு மொழி ஒரு தடையில்லை என்பதை இந்த சகோதரிகள் நிரூபித்துள்ளதாக பலரும் தங்களுடைய பாராட்டை தெரிவித்து வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண