நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது பட்ஜெட் மாணிய கோரிக்கை மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று சாலை போக்குவரத்து துறை தொடர்பான மாணிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. 


 


இந்த விவாதத்தில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மக்களவை எம்பி தபீர் கயோ பேசினார். அப்போது, “தற்போது நான் அமைச்சர் நிதின் கட்கரியின் பெயரை ஸ்பைடர்மேன் என மாற்றி விட்டேன். ஏனென்றால் ஸ்பைடர்மேன் எப்படி வேப் விட்டு செல்வாரோ அதேபோன்று நாடு முழுவதும் வேப் விடுவதை போல் அவர் சாலைகளை அமைத்து வருகிறார். குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா-சீனா எல்லை வரை தற்போது இரண்டு வழி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பாக அங்கு பல பகுதிகளில் சரியான சாலை போக்குவரத்து வசதிகள் இல்லை. ஆனால் தற்போது அது மாறி வருகிறது. ஆகவே இந்த ஸ்பைடர்மேன் தொடர்ந்து தன்னுடைய வேலையை செய்வார் என கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


 






இது தொடர்பான வீடியோவும்  சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. மத்திய அமைச்சரை ஸ்பைடர்மேன் என்று எம்பி ஒருவர் கூறிய போது மக்களவையில் பலரும் அதைக் கேட்டு சிரிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: 137 நாட்களுக்கு பிறகு உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை? கடந்து வந்த பாதையும் காரணமும்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண