அருணாச்சல் பிரதேசத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தமைக்கு கண்டனம் தெரிவித்த சீனாவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் பயணம்:
பிரதமர் மோடி மார்ச் 9 ஆம் தேதி வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றார். அப்போது பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அருணாச்சல் பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, செலா சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார். இந்த சுரங்கப்பாதையானது அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் பயணம் தூரம் குறையும் மற்றும் நேரம் குறைவதோடு, ராணுவ தளவாடங்களை எடுத்துச் செல்ல ஏதுவாகவும் உள்ளது.
சீனா எதிர்ப்பு:
இந்நிலையில், பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த சீன அரசு, அருணாச்சல் பிரதேசம் சீனாவின் அங்கம் என்றும் தெரிவித்தது. அருணாச்சல் பிரதேசத்தை செங்கம் என குறிப்பிட்டு, இது திபெத்தின் தென் பகுதி என்றும், இந்தியா சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறது என்றும் சீன வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது.
மேலும். இந்திய பிரதமர் மோடிக்கு வருகை தந்தமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டிருந்தது சீன ராணுவம்.
இந்தியா கண்டனம்:
இதற்கு கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம், சீன வெளியுறவுத்துறை தெரிவித்த கருத்துக்களை அறிந்தோம். இது அபத்தமான கருத்து, இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியே தவிர சீனாவுக்கு சொந்தமானது இல்லை . மேலும், எங்கள் நாட்டில் உள்ள நிலபரப்புக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து கொண்டு இருப்போம். சீனா உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது. ஏற்கனவே தக்க பதிலடிகளை கொடுத்துள்ளோம் என்று கண்டனம் தெரிவித்தது.
இந்திய நிலப்பரப்பு பகுதியான அருணாச்சல் பிரதேசத்தை, சீனா உரிமை கொண்டாட முயற்சிப்பதும், எப்பொழுதெல்லாம் இந்திய தலைவர்கள் யாரேனும் செல்லும் பொழுது எல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பதும், இதற்கு இந்திய அரசாங்கமும் தக்க கண்டனம் தெரிவிப்பதும் தொடர் நிகழ்வாகி வருகிறது.