இன்று காலை வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மூடுபனி படர்ந்ததால், வடக்கு ரயில்வே பகுதியில் சுமார் 15 ரயில்கள் தாமதமாக புறப்பட்டது.
தேசிய தலைநகர் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு ரயில்கள் வருவதற்கு திட்டமிடப்பட்ட நேரத்தை விட 8 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. பூரி-புது டெல்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் உட்பட 15 ரயில்கள் தாமதமாக வந்ததாக ரயில்வே தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக, பதான்கோட், போபால், லக்னோ, பிரயாக்ராஜ், தர்பங்கா, சீல்டா, ஹவுரா, புது தில்லி, பதிண்டா, அசிம்கஞ்ச், ஹோஷியார்பூர், ஜலந்தர், ராம்நகர், கோயம்புத்தூர், பிலாஸ்பூர், அகமதாபாத் போன்ற நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் இணைப்பைப் பாதிக்கும் 320 ரயில்களை ரயில்வே ரத்து செய்துள்ளது. ரயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் புது டெல்லி ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். "ரயில் 4 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது. இந்த குளிரில் நாங்கள் சிரமப்படுகிறோம். பிரச்னைகளை கேட்க ஆள் இல்லை. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என பயணி ஒருவர் கூறினார்.
இதற்கிடையில், இன்று இந்திய வானிலை ஆய்வுத் மையத்தின்படி, சஃப்தர்ஜங் மற்றும் பாலம் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 4.6 டிகிரி மற்றும் 6.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, சஃப்தர்ஜங்கில் 1.4 டிகிரி செல்சியஸ் மற்றும் லோதி சாலையில் 1.6 டிகிரி செல்சியஸ் பதிவானது.