3 பெண்கள் உட்பட 9 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 9 பேரை ஒரே தீர்மானத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவது வரலாற்றில் இது முதன்முறை.
உச்ச நீதிமன்றத்துக்கான நீதிபதிகளை தேர்வு செய்ய கொலீஜியம் என்ற குழு இருக்கிறது. இதனை தமிழில் நீதிபதிகள் தேர்வுக் குழு (Collegeium-கொலீஜியம்) என்று கூறுகிறோம். இது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன், உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இத்தேர்வுக்குழுவின் பணி, உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதே.
இந்நிலையில் இந்தக் குழு கடந்த 17 ஆம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்க பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி, அந்தப் பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிய பின்னர், இவர்கள் 9 பேரும் முறைப்படி பதவியேற்றுக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.
யார் அந்த 9 பேர்?
கொலீஜியம் பரிந்துரைத்த அந்த 9 பேர் யார் என்று அறிந்துகொள்ளலாம். ஏற்கெனவெ குறிப்பிட்டபடி இந்தப் பட்டியலில் மூன்று பெண் நீதிபதிகளும் இடம் பெற்றுள்ளனர். சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பேலா எம். திரிவேதி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா ஆகியோர் தான் அந்த மூவர். மற்ற 6 பேரில் ஒருவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்.
பொதுவாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உயர் நீதிமன்ற நீதிபதிகளோ, தலைமை நீதிபதிகளோ மட்டும்தான் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் சில நேரங்களில் இந்த மரபுக்கு மாற்றாக உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் பதவி வகித்தவர்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்படுவது உண்டு. அதன்படி, மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா இந்த முறை அந்த சலுகையைப் பின்பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மற்ற ஐவரின் விவரம்:
மூன்று பெண் நீதிபதிகள், ஒரு கூடுதல் சாலிசிட்டர் ஜெனரலைத் தாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ள 4 நீதிபதிகளின் விவரம் வருமாறு:
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா, குஜராத் தலைமை நீதிபதி விக்ரம் நாத், தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி, நீதிபதி சி.டி.ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் தான் அந்த 4 பேர்.