முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாடன் அப்துல் கலாமுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.


அறிவியல் விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமின் 90ஆவது பிறந்ததினம் இன்று. ஒவ்வொரு ஆண்டும் அப்துல் கலாமின் பிறந்தநாள் உலக மாணவர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


 






பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஏவுகணை மனிதன் என்று அழைக்கப்படும் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவை வலிமையான, வளமான மற்றும் சக்திவாய்ந்ததாக மாற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார்” எனப் பதிவிட்டுள்ளார்.


 






இதேபோல், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண