Headlines Today, 15 Oct: சாம்பியன் ஆகுமா சென்னை... எஸ்கேப் புலி... கோயில்கள் திறப்பு... இன்னும் பல..!

Headlines Today, 15 Oct: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு 

Continues below advertisement

* வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. 

* மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மயக்க ஊசி செலுத்தப்பட்டும் தப்பிய டி-23 புலியை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் புலி சோர்வுடன் காணப்படும் என்பதால் 21ஆவது நாளாக தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், ஊர் மக்கள் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடவேண்டாம் என வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

* சென்னையில் ஓரு லிட்டர் பெட்ரோல், நேற்று 31 காசுகள் அதிகரித்து ரூபாய் 102.10-க்கு விற்பனையான நிலையில், இன்று மேலும் 30 காசுகள் அதிகரித்து 102.40-க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல், 33 காசுகள் அதிகரித்து ரூபாய் 98.26-க்கு விற்பனையாகிறது. 

* சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் இழுத்தடித்து வந்த ஒய் ஜி மகேந்திரனின் மகள் மற்றும் பாஜக செயற்குழு உறுப்பினர் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைப்பு.

* தமிழ்நாட்டில் நேற்று 1,37,423  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  1,259 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 163  பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.  20  பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். நேற்றைவிட உயிரிழப்பு அதிகம். 1438 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியா

2021ஆம் ஆண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கணக்கிடப்பட்ட 116 நாடுகளுள் இந்தியா 101வது இடத்தைப் பெற்றுள்ளது.


உலகம்

தைவான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கயோசியாங் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொழுதுபோக்கு

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தின் டீசர் நேற்று வெளியானது. அதிரடி மற்றும் மாஸாக உள்ள டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விளையாட்டு

* ஐபிஎல் 14ஆவது இறுதிப்போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் பரபரப்பான இறுதிப்போட்டி துபாயில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் டி-20 போட்டிகளில் சென்னை அணி 3 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

 

 

Continues below advertisement