டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) ரயில் பெட்டிகளுக்குள் வீடியோக்களை பதிவு செய்யக்கூடாது என்று பலமுறை எச்சரிக்கை விடுத்தாலும், பல பயணிகள் இன்னும் விதிகளை மீறி வீடியோக்கள் எடுத்து வெளியிடதான் செய்கின்றனர். இந்த நேரத்தில், டெல்லி மெட்ரோ ரயில் பெட்டியில் ஒரு பெண் பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக ஊடக பயனர்களிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது.
டெல்லி மெட்ரோவில் நடனம்
அந்த வீடியோவில், நேஹா பாசின் மற்றும் பப்பி லஹிரியின் 'அசலாம்-இ-இஷ்கும்' பாடலுக்கு கருப்பு நிற வலை போன்ற டாப் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்த பெண் உற்சாகமாக நடனமாடும் வீடியோ ஒன்று வைராலகி வருகிறது. வைரல் ஆகியுள்ளது ஷார்ட்ஸில் உள்ள பெண் ப்ரியா ஷர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வீடியோ அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஹேண்டிலில் பகிரப்பட்டுள்ளது.
கலவையான விமர்சனம்
இந்த வீடியோ கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. சிலர் அவரது நடனத்தை விரும்பி அவரது தன்னம்பிக்கையைப் பாராட்டி வருகின்றனர், மற்றவர்கள் DMCR (டெல்லி மெட்ரோ) இன் அதிகாரப்பூர்வ Instagram கணக்கைக் டேக் செய்து மற்றும் இதுபோன்ற நடத்தைகளை நிவர்த்தி செய்வதில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
கமெண்டுகள்
"நல்ல முயற்சி, ஆனால் தயவுசெய்து இதை மீண்டும் முயற்சிக்க வேண்டாம்" என்று ஒரு பயனர் எழுதினார். "இது நிறுத்தப்பட வேண்டும்," மற்றொருவர் கூறினார். மற்றொருவர் "இதில் எந்தத் தவறும் இல்லை... அவர் திரைப்படங்களில் எதைப் பார்க்கிறாரோ அதைதான் சமூகத்தில் செய்கிறார்…" என்றார். ஒருவர், "சூப்பர் கூல் - சிலர் ஏன் எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள்? கொஞ்சம் ரசியுங்கள் தோழர்களே," என்றார்.
வீடியோ எடுக்க வேண்டாம் என வலியுறுத்திய டெல்லி மெட்ரோ
குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், டிஎம்ஆர்சி நிர்வாகம், மெட்ரோ ரயில்களுக்குள் வீடியோக்களை எடுக்க வேண்டாம் என்று பயணிகளைக் கேட்டுக் கொண்டது. "மெட்ரோவில் பயணம் செய்யுங்கள், சிக்கலை ஏற்படுத்தாதீர்கள்", என்று இந்தியில் ஒரு பிரபல மீம் மூலம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.