பொதுவாகவே இயற்கையின் படைப்பில் மூன்று வகை உண்ணிகள் தான் இந்த பூமியில் உள்ளது. அவற்றை அசைவ உண்ணிகள், சைவ உண்ணிகள் மற்றும் அனைத்து உண்ணிகள் என வகைப்படுத்தலாம். அதாவது இவற்றில் அனைத்து உண்ணிகள் என்பது சைவ வகை உணவையும் அசைவ வகை உணவையும் உண்ணும். சைவ வகை உணவுகள் என்பது சைவ உணவுகளான காய், இலை, பழம், தண்டு என சைவ வகை உணவுகளை உண்டு வாழும். ஆடு, மாடு, எருமை யானை, மான் போன்றவை சைவ உண்ணிகள் தான். 


பாம்பை விழுங்கும் மான்:


அதேபோல், புலி, சிங்கம், நரி, ஓநாய் போன்றவை அசைவ உண்ணிகள் அதாவது மாமிசத்தை மட்டும் உண்டு வாழும், இவ்வகையில் கடைசி இடத்தில் உள்ளது, அனைத்து உண்ணிகள் தான், அதாவது, மனிதன், நாய், பன்றி, மீன், கோழி, பருந்து போன்ற பறவைகள் என இவையெல்லாம் சைவ உணவையும் அசைவ உணவையும் உண்டு வாழும். 



 

வைரலாகும் வீடியோ:


இயறகையின் படைப்பு இப்படி இருக்கும் போது, நமது ஊரில் உள்ள சொலவடை அதற்கு ஏற்ற வகையில். “புலி பசித்தாலும் புல் திண்ணாது” உள்ளது. அதாவது மாமிசம் உண்டு வாழும் புலி தனக்கு எவ்வளவு பசித்தாலும் புல்லைட உணவாக உட்கொள்ளாது எனவும், வேட்டையாடி  மாமிசத்தை தான் உட்கொள்ளும் என பொருள். 

அதேபோல், சைவ உண்ணிகள் சைவத்தினை மட்டும் தான் உணவாக உட்கொள்ளும்.

 

ஆனால் இன்றைக்கு இணையத்தினை ட்ரெண்ட் ஆக்கி வருவது, வனப்பகுதியில் உள்ள மான் தனது அன்றாட உணவைப் போல் பாம்பை உண்டு வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதுடன் மிகவும் சுவாரஸ்யமான கமெண்ட்களையும் பெற்று வருகிறது.