ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் உட்கட்டமைப்பு நிறுவன இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அனில் அம்பானி
அனில் அம்பானி,ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் உட்கட்டமைப்பு நிறுவனங்களின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார்.

அனில் அம்பானி,ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் உட்கட்டமைப்பு நிறுவனங்களின் இயக்குநர் பதிவியை ராஜினாமா செய்தார்.
அனில் அம்பானிரிலையன்ஸ் ஹோம் ஃபினான்ஸ் நிறுவத்தின் மோசடி காரணமாக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் மூன்று பேரை, கடந்த பிப்ரவரியில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் ( SEBI (Securities and Exchange Board of India)) தடை செய்தது. மேலும், ’செபியில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு இடைத்தரகர், பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம் அல்லது பொது நிறுவனங்களின் செயல் இயக்குநர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்டார்களை தொடர்பு கொள்ளவும் தடை விதித்துள்ளது.
Just In




இந்நிலையில், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டிரக்சர் நிறுவனங்களின் இயக்குநராக, Independent Director பொறுப்பு வகிக்கும் ராகுல் சரின், கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஐந்தா
ண்டுகளுக்கு இந்த பொறுப்பை வகிப்பார் என்றும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டிரக்சர் நிறுவனங்களின் உறுப்பினர்களுடனான பொதுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அனைத்து பங்குதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிறுவனத்திற்கு தனது பார்வை மற்றும் தலைமையை வழங்க அம்பானியை மீண்டும் அழைப்பதற்கும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆர்வமுடன் இருப்பதகாவும், இதுவரை ரிலையன்ஸ் குழுமத்திற்கு அனில் அம்பானியின் பங்களிப்பு என்பது விலைமதிப்பற்றது என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தெரிவித்துள்ளது.
72 வயதான ராகுல் சரின், 35 ஆண்டுகளுக்கும் மேலாக பொது சேவையில் சிறந்த சாதனை படைத்த அரசு ஊழியர். இந்திய அரசின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் இவர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்