ஆந்திராவில் கர்ப்பமாக இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனை கடந்த 9 மாதங்களாக ஏமாற்றி பணம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஆந்திர மாநிலம் கொக்காவார் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த சத்யநாராயணன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சத்யநாராயணன் தனது மனைவி மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு பரிசோதனைக்காக காக்கிநாடா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மகாலட்சுமியை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவமனை நிர்வாகம் கர்ப்பமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். 


இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சத்யநாராயணன் மனைவியை மாதந்தோறும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டு வந்துள்ளார். மேலும், மாதந்தோறும் அவர்கள் தரும் மருந்துகள், பரிசோதனைக்கான பீஸ் என அனைத்திற்கு பணம் செலவலித்து வந்துள்ளார். 


மகாலட்சுமி கர்ப்பமாக இருப்பதாக எண்ணிய சத்யநாராயணன் ஆறாவது மாதத்தில் அந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், வருகின்ற செப்டம்பர் மாதம் 22 ம் தேதி குழந்தை பிறக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில், கடந்த வாரம், மகாலட்சுமியின் பெற்றோர், வளைகாப்பு நடத்தி, தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து மகாலட்சுமி கர்ப்பமாக இல்லை என தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.


உடனடியாக மகாலட்சுமியுடன் அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எடுக்க சத்யநாராயணன் வற்புறுத்தினார். மருத்துவ பணியாளர்கள் ஸ்கேன் எடுத்து அனுப்பி வைத்ததில் மகாலட்சுமியின் வயிற்றில் குழந்தை இல்லை. இதுகுறித்து சத்யநாராயணன் என்ன என்று மருத்துவரிடம் கேட்டபோது, ​​சரியான பதில் கூறாமல் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். சரியால  ஒன்பது மாதங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து, குழந்தை ஆரோக்கியமாக இருக்கவும், குழந்தையின் வளர்ச்சிக்காகவும் ஒவ்வொரு மாதமும் மருந்துகளை எழுதிக் கொடுத்து ஏமாற்றியதாக தகவல் தெரிவித்தார். 


ஆனால், இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தங்கள் மருத்துவமனைக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே இவ்வாறு செய்கிறார்கள் என்றும், றுதி ஸ்கேன் பரிசோதனையில் கருவில் குழந்தை இல்லை என தெரியவந்துள்ளது. பிரசவ தேதியை நாங்கள் கூறவில்லை என்றும் தெரிவித்தனர்.