ஆந்திர பிரதேசத்தில் விபத்து:


ஆந்திரப் பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தெனாலி நகர் பகுதியில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே ஆட்டோ ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து கார் ஓட்டுநர் இடதுபுறமாக திருப்ப முயன்றார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறிய கார் இடது புறம் வேகமாக சென்றது. அந்த நேரத்தில் ரிக்‌ஷாவை சரிபார்த்து கொண்டிருந்தவரின் மீது அதிவேகமாக மோதியது. மேலும் இருவரின் மீதும் கார் மோதி, அங்குள்ள பல இருசக்கர வாகனங்களின் மீதும் மோதி சேதத்தை ஏற்படுத்தியது.


காரை ஓட்டிய சிறுவர்கள்:


கார் விபத்துக்குள்ளானதை அறிந்த அருகில் இருந்தவர்கள், உடனே விபத்துக்குள்ளான இடத்திற்கு ஓடி வந்தனர். பின்னர் வாகனங்களுக்குள், சிக்கிக் கொண்டிருந்த விபத்துக்குள்ளானவர்களை உடனடியாக மீட்டனர். இதில் ஒருவரின் கால் சிதைந்துள்ளதாகவும், மற்ற இருவர்கள் படுகாயங்கள் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர்  3 பேரும் உடனடியாக தெனாலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது, சிறுவன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த சிறுவனுடன் மற்றொருவரும் பயணித்ததாக கூறப்படுகிறது.


காவல்துறை நடவடிக்கை:


காரை ஓட்டியது சிறார் என அறிந்த அப்பகுதியினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து,  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறார்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் கார் ஓட்டிய சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அதிர வைக்கும் காட்சிகள்:


18 வயது நிறைவடையாத சிறுவர்கள் காரை ஓட்டி வந்து விபத்துக்குள்ளாக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








Also REad: Junior Court Assistant: உச்ச நீதிமன்றத்தில் வேலை காத்திருக்கு..விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான விவரத்தை இக்கட்டுரையில் காணலாம்.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண