கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி 9 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதம் ஆகியிருக்க வேண்டும் என்பது 6 மாதமாக அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்கும், முதல் டோஸுக்கும் இடையிலான இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக மத்திய அரசாங்கம் குறைத்துள்ளது. தடுப்பூசி பற்றிய அரசாங்கத்தின் ஆலோசனைக் குழு - நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்.டி.ஏ.ஜி.ஐ) - இரண்டாவது ஜப் மற்றும் பூஸ்டர் டோஸ் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க பரிந்துரைத்தது.
18 முதல் 59 வயது வரை உள்ள அனைத்து பயனாளிகளுக்கான முதல் டோஸ், தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களில் 6 மாதங்கள் அல்லது 26 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கப்படும்” என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கடித்ததில் “60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் முடிந்த பிறகு முன்னெச்சரிக்கை டோஸ் இலவசமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்