AP Minister Gowtham Reddy: ஆந்திர தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி மரணம்

ஆந்திர தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

Continues below advertisement

ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தின் அட்மாகூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக மெகபதி கௌதம் ரெட்டி தேர்வாகியிருந்தார். இரண்டாவது முறையாக இவர் எம்.எல்.ஏவாக அதே தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ளார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் இவர் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். 

Continues below advertisement

 

இந்நிலையில் கௌதம் ரெட்டி(50) மாரடைப்பால் இன்று காலமாகியுள்ளார். இன்று காலை அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மயங்கி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவரை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola