முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்த நபர், மனைவிகளின் தொந்தரவு தாங்க முடியாமல் தலைமறைவாகியுள்ளார்.


ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், அங்குள்ள டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண் என்ற இளைஞர். இவர் டிக்டாக் வீடியோக்களால் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார். இவருக்கும் விமலா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் நட்பு ஏற்பட்டுள்ளது.


முதல் திருமணம்:


பரஸ்பரம் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட நட்பு நாட்கள் செல்லச்செல்ல காதலாக மாறியது. ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டனர். முன்பை விட இருவரும் பிரபலமாகினர். அதையடுத்து விமலா, கல்யாண் ஆகியோர் திருமணமும் செய்து கொண்டனர்.


அதன் பின்னர் தான் அந்த விபரீதமும் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின்னர் விமலா வழக்கத்திற்கு மாறாக சோகமாக மாற கல்யாண் ஏன் என்று தெரியாமல் புலம்பியுள்ளார். பின்னர் விமலாவிடம் ஏன் சோகாமாக இருக்கிறாய் என்று கல்யாண் கேட்க, தன்னை நித்யஸ்ரீ என்ற பெண் சந்தித்ததாகக் கூறியுள்ளார். இதை கேட்ட கல்யாண் அதிர்ச்சி அடைந்தார்.


அதிர்ச்சியடைந்த கல்யாண்:


கல்யாணுக்கு விவரம் புரிந்தது. ஏனென்றால், விமலாவை சந்திப்பதற்கு முன்னர் இன்ஸ்டாவில் நித்யஸ்ரீயை, கல்யாண் விரும்பியுள்ளார். இந்த சம்பவம் விமாலாவுக்கு தெரிந்ததை அறிந்து கல்யாண் சோகமடைந்தார்.


இரண்டாவது திருமணம்:


தன் காதலை விமலாவிடம் சொல்லிப் புலம்பிய நித்யஸ்ரீ தன்னை கல்யாணுடன் சேர்த்து வைக்குமாறு கெஞ்சி மன்றாடியுள்ளார். விமலாவும், சரி நான் உனக்கு என் கணவரை திருமணம் செய்துவைக்கிறேன். ஆனால் நாம் மூவரும் சேர்ந்து தான் வாழ வேண்டும் என்று கூறினார். இதற்கு ஒப்புக்கொள்ள கல்யாண், நித்யஸ்ரீ திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தின்போது மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமீபத்தில் வெளியானது.


 கணவர் தலைமறைவு:


இந்நிலையில், மேலும் அதிர்ச்சி சம்பவம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டு மனைவிகளின் தொந்தரவு தாங்க முடியாமல், கல்யாண் தலைமறைவாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Also Read: திருமணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.