ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
மாடியில் இருந்து குதித்த மாணவர்:
நாராயணா கல்லூரியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று காலை 10:15 மணி அளவில், வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, வகுப்பறையில் இருந்து வெளியே வந்த மாணவர், திடீரென மூன்றாவது மாடியில் இருந்து குதித்தார்.
வகுப்பறையில் இருந்த ஒரு கேமராவில், வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது மாணவர் ஒருவர் அறையை விட்டு வெளியேறுவதைக் காணலாம். தடுப்பு சுவரை நோக்கி நடந்து சென்ற அவர், அதன் மீது ஏறி நின்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
என்ன நடந்தது என்று பார்க்க அவரது வகுப்பு தோழர்கள் அறையை விட்டு வெளியேறினர். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்கொலை ஒரு தீர்வல்ல. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால், கீழ்காணும் உதவி எண்களை தொடர்பு கொள்ளவும்:-
- சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 24640050 (24 மணிநேர சேவை)
- மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (224 மணிநேர சேவை)
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன)
- மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820
- தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்